உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அவை, வள்ளுவரின் கருத்தல்ல என்று ஆராய்வதை விட; அவற்றிலே என்னென்ன சொல்லப்பட்டிருக் கின்றன-என ஆராய்வது மிக மிகச்சால்புடையது! . பொறுத்தமுடையது--என்று நான் சொல்ல விரும்பு கிறேன். 2 வள்ளுவர்,வாழ்க்கைத்துணை நலம் என்றுதான் குறளில் குறிப்பிடுகிறார். இன்றைய தினம் ஆங்கி லத்திலே 'ஒய்ப்' என்றும் ; தமிழென நினைத்துக் கொண்டு 'பாரியாள்' என்றும்; 'கிரகலட்சுமி' என்றும் அழைக்கப்படுகின்ற பெண்ணினத்தை வள்ளுவர் மிகமிக அழகாகச் சொன்னார். "வாழ்க்கைத்துணை நலம் என்று வாழ்க்கைத் துணைவி என்றுகூடச் சொல்லவில்லை; வாழ்க்கைத்துணை நலம் என்கிறார். அந்தப் பகுதியிலே அவர் குறிப்பிடுகிறார். 99 "தெய்வந்தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை " அதற்கு. இன்றைய தினம் நமக்குத் தரப்படு கின்ற பொருள் - பரிமேலழகர் போன்றவர்கள் தந்தி ருக்கும் உரை-தெய்வம் தொழா அள் கொழுநற் தொழுதெழுவாள் - தெய்வத்தைத் தொழாமல் கண வனைத் தொழுதெழுகின்றாளே அந்தப் பெண், பெய் யென்று சொன்னால், உடனே மழை பொழியும் - இது நாம் இதுவரை கற்றிருக்கிற - நமக்குத் தரப்பட் டிருக்கிற பொருளாகும். கணவனைத் தெய்வமாகக் கருதுகிற ஒரு பெண் ஊரிலே மழை இல்லாவிட்டால், வயல் வெளியிலே வந்து நின்று கொண்டு வருண பகவானே வா " என்று அழைத்தால் உடனே வருண பகவான் முத்துமுத்தாக மழையைக் குவிப்பான் 99 66 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/39&oldid=1703226" இலிருந்து மீள்விக்கப்பட்டது