உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 40 60 என்று தான் அந்த உரைகளிலே காணக்கிடக்கிறது. ஆனால், அந்தக் குறளை இலக்கணரீதியாக - நல்ல தமிழறிவோடு சிந்தித்துப்பார்க்கிற நேரத்தில் - ஆராய்ந்து பார்க்கிற நேரத்தில் நமக்கென்ன பொருள் கிடைக்கிறது? பெண்ணை உயர்த்திப் பேச முனைந்த வள்ளுவர், பெண்ணை எதற்கு ஒப்பிடுகிறார். என்றால் - மழைக்குச் சமானமாகக் குறிப்பிடுகிறார். அதுவும் எந்த மழைக்கு ? " பெய் யெனப் பெய்யும் மழைக்கு ' ! "பெய்" என்று சொன்னவுடன் பெய்தால் அது எப்படிப்பட்ட மழையோ வா என்றழைத்த வுடன் வந்தால் அவன் எப்படிப்பட்டவனோ போ' என்று சொன்னவுடன் போய்விடுபவன் எப்படிக் கட்டளைக்கு உட்படுகிறானோ, ஆட்படுகிறானோ - அது போல "தெய்வந் தொழாள் கொழுநற் தொழுதெழு -கணவனைத் தெய்வமாகக் கருதுபவள் "பெய்' என்ற உடனேயே பெய்கின்ற மழைக்குச் சமமா வாள் - என்று தான் வள்ளுவப் பெருந்தகையார் வாழ்க்கைத்துணை நலம் என்ற தலைப்பிலே குறிப்பிடு கிறார். வாள் - 99 இதை எந்தப் பண்டிதர்களும் - நிச்சயமாகச் சொல்லுகிறேன் ; மறுக்க முடியாது. பெய்யெனப் பெய்யும் மழை "யென்றால் பெய் யென்று சொன்ன வுடன் பெய்யும் மழைக்கு ஈடாகும் என்பதே தவிர “சொன்னால் மழை பெய்யும் " என்ற பொருளல்ல. அந்த வார்த்தைக்கு அங்கே இடமேயில்லை. அப் படி இருக்கும்போது, இவர்களாகவே ஒன்றைச் சிருட்டித்துக் கொண்டு, பெண்களை இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காகவேதான் குறளுக்கு மறுப்பு எழுதியிருக்கிறார்களென்று நான் கருதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/40&oldid=1703227" இலிருந்து மீள்விக்கப்பட்டது