உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 எங்கே?” என்று தேடி அலைகிறான். அவனை எதிர்த்து ஒரு யானை வருகிறது அதை எதிர்க்க ஒரு வேல் தேவை அவனுக்கு கிடைக்கவில்லை. சுற்றும் முற் றும் பார்க்கிறான்; கடைசியில் அவன் மார்பிலே ஒரு வேல் பாய்ந்து நிற்பது தெரிகிறது. அதை எடுத்து எறிகிறான். எவ்வளவு வீரம்! எவ்வளவு அழகாக திருவள்ளுவரால் எடுத்துக் கையாளப்படுகிறது என் பதை உணர்ந்து பார்க்க வேண்டும். "கைவேல் களிற்றொரு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்." 99 அதைப் போலவே, இங்கு இருக்கின்ற மாணவர் களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்...... நம்முடைய தந்தை-நம்முடைய பெற்றோர்-நம்மிடத்தில் என்ன நன்றியை எதிர்பார்க்கிறார்கள்? அதுபோலவே,அவர் கள் நமக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்பதை வள்ளுவர் எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். - வி மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - எப்படி இருக்க வேண்டும்? இவனைப் பெறுவதற்கு இவ னுடைய தந்தை என்ன 'தவம்' இருந்தானே-என் று ஊரார் சொல்லுகின்ற அளவுக்கு, மகன் தன்னுடைய வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என் கிறார், மகன் செய்ய வேண்டிய உதவி இதுவென்றால், அதே நேரத்தில் தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய உதவி என்ன? "அவையத்து முந்தியிருப்பச் செயல்!" என்று கூறுகிறார். தந்தை செய்ய வேண்டிய கடமை- மகனை அவையத்து முந்தியிருப்பச் செயல்! 'அவை' யென்றால் மன்றம்; அத்தகைய மன்றத்தில் முதல்வ 6 . 0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/45&oldid=1703232" இலிருந்து மீள்விக்கப்பட்டது