உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைக்காக வாழ்ந்திடுவோம்

இன்றையதினம் மலையென மாலை குவித்து அலை யென ஆர்வமுள்ள முழக்கஞ்செய்து என்னை வர வேற்ற உங்கள் அனைவரின் ஊக்கத்தையும், உணர்ச் சியையும் நான் எப்படிப் பாராட்டி நன்றி தெரிவிப் பது என்று தெரியாது விழிக்கின்றேன். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தலுக்கு நிற்கிறேன், என்னை ஆதரிக்கவேண்டு மென்று லாலாப்பேட்டையில் முன்பு பேசினேன். இந்தக் கூட்டத்தில் பாதி அளவு கூட்டந்தான் அன்று இருந்தது. இத்தனைக்கும் குறித்த நேரத் தில் ஆரம்பிக்கப்பட்டது அது. ஆனால் இன்றோ இக் கூட்டம் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. எனினும் அன்றைய தினம் கூடியிருந்ததைவிட இரண்டு பங்கு அதிகமான கூட்டத்தை நான் இங்கு காணுகிறேன். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் லாலாபேட்டையில் எவ்வளவு வளர்ந்திருக் கிறது என்பது மிகமிக நன்றாகத் தெரிகிறது இரண் டாயிரம், மூவாயிரம் என்ற அளவில் இருந்த கூட் டம்-ஆறாயிரமாக வளர்ந்திருக்கிறது என்றால்-அது வும் மாலை ஆறு மணியிலிருந்து நடைபெற்ற ஊர் வலத்திலும் கலந்துகொண்டு-அந்தக் களைப்பை மறந்து - பலர் சாப்பாட்டையும் மறந்து-தூக்கத் வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/5&oldid=1703192" இலிருந்து மீள்விக்கப்பட்டது