உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திற்கும் கூட்டத்திற்கு மிடையே கூடியிருக்கிறீர் களென்றால் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை உணர்வு எந்த அளவில் உங்கள் உள்ளத் தில் பதிந்திருக்கிறது என்பதைத்தான் அது புலப் படுத்துகிறது. இன்றைய தினம் உங்கள் முன்னிலையில், உங்கள் குடும்பத்துப் பிள்ளைகளில் ஒருவனாக நின்றுகொண் டிருக்கும் நான்-சகோதரனாக நின்றுகொண்டிருக் கும் நான்-வீட்டுச் செல்வங்களில் ஒருவனாக நின்று கொண்டிருக்கும் நான் பெற்ற இந்த மாலைகள்-என் கழுத்திலே விழுந்த வெற்றி மாலைகள்-உங்கள் அனைவரின் கழுத்திலேயும் விழுந்த மாலைகள் தான்! நான் பெற்ற வெற்றி நீங்கள் பெற்ற வெற்றியாகும். க க. இந்தத் தொகுதியில்-நான் முன்பே குறிப்பிட் டதுபோல என்னை எதிர்த்து பதினான்கு பேர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு அது பதிமூன்றாக மாறி, பனிரண்டாகி, பின் பதினொன்றாகத் தேய்ந்து பிறகு நான் அடிக்கடி கேலியாகக் குறிப்பிட்டதுபோல தசாவதார "மாகி, நவக்கிரகங்களாக உருவெடுத்து, பின், அஷ்டதிக்குப் பாலகர்களாக மாறி-கடைசியில் ஏழு பேர் என்று முடிந்தது. என் ஒருவனை எதிர்த்து காங்கிரசு அபேட்சகரைத் தவிர்த்து எனக்கு விழ வேண்டிய வோட்டுகளை நான்காயிரம்-ஐயாயிரம் என்று சுயேச்சைகளை விட்டுப் பிரித்துவிடலாம் என்று நயவஞ்சக நரித்தன்மை செய்தும்- பலிக்காமல், அப் படியும் வெற்றி பெற இயலாமல்-உங்கள் ஒருமித்த ஆதரவால் - உங்கள் அன்புக்குரிய நான் வெற்றிக் களிப்போடு உங்களைச் சந்திக்கும் நல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/6&oldid=1703193" இலிருந்து மீள்விக்கப்பட்டது