உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 திராவிட முன்னேற்றக் கழகம் நூற்றிருபது இடங்களில் போட்டியிட்டு, பதினைந்து இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது -என்பது எல்லாம் நீங்கள் அறிந்ததே! பதினைந்து பேர்கள் தான் சட்டசபைக் குச் செல்லயிருக்கிறோம். என்றாலும், திராவிட முன் னேற்றக் கழகத்திற்கு நாட்டிலே இருக்கும் செல் வாக்கு என்ன? மக்கள் உள்ளத்திலே அது பெற் றிருக்கும் மதிப்பு என்ன? பெருமை என்ன? மரியாதை என்ன? என்று நீங்கள் ஒரு முறை சிந்தித்துப்பார்க்க வேண்டும். திராவிட முன்னேற்றக்கழகம் பதினைந்து இடங் களில் தான் வெற்றிபெற்றது என்றாலும், போட்டி யிட்ட நூற்றிருபது இடங்களில் பெற்ற வோட்டுகள் எத்தனை? காங்கிரசு இந்த நாட்டிலே இருநூற் றைந்து இடங்களில் - மூன்று போக - மிகுதி இரு நூற்று இரண்டு இடங்களில் தன் அபேட்சகர்களை நிறுத்தி வைத்தது என்றாலும், அதுபெற்ற மொத்த வோட்டுகள் எத்தனை? காங்கிரசுக்கு எதிர்ப்பாக விழுந்த வோட்டுகள் எத்தனை என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கு மிகப்பெரிய உண்மை ஒன்று புலப்படும். . நான் புள்ளி விபரங்களோடு சொல்ல விரும்பு கிறேன். தமிழ்நாட்டில் காங்கிரசு போட்டியிட்ட அத், தனை இடங்களிலும் பெற்ற மொத்த வோட்டுகள் ஐம்பது லட்சத்து நாற்பதினாயிரத்து ஐநூற்று எண் பத்தேழு ஆகும். அந்த இடங்களில் எல்லாம் காங்க கிரசுக்கு எதிராக ஒரே பெட்டியில் விழாமல்-திராவிட முன்னேற்றக்கழகப் பெட்டியில் - சோஷலிஸ்டுகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/7&oldid=1703194" இலிருந்து மீள்விக்கப்பட்டது