உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - 86 - பெட்டியில் - பிரஜா சோஷலிஸ்டுகளின் பெட்டியில் - கம்யூனிஸ்டுகளின் பெட்டியில் – சுயேச்சைகளின் பெட்டியில் - இப்படியாகப் பல பெட்டிகளில் காங்கிர சுக்கு எதிர்ப்பாக விழுந்திருக்கிற மொத்த வோட்டு கள் அறுபத்தோரு லட்சத்து அறுபத்து நான்கா யிரத்து எழுநூற்று அறுபத்தாறாகும். அறுபத்தோரு லட்சம் பேர்கள் காங்கிரசை விரும்பாமல் "எங் களுக்குக் காங்கிரசு தேவையில்லை" என்று எதிர்ப் று பாகத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்! இந்தப் புள்ளி விப ரங்களை வைத்துக்கொண்டு "காங்கிரசு தேவையா இல்லையா?' என்று ஆராய்ந்தால், அதை ஆதரிப் போரைவிட - அதை விரும்பாதவர்கள் பதினோரு லட்சம் பேர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது புரியும். - காங்கிரசை எதிர்த்து நின்ற கட்சிகள் எல்லாம் ஒன்று சேராத காரணத்தால் - தன்னந்தனியே யிட்ட காரணத்தால் போட்டியிட்ட சுயேச்சைகளும் குறுக்கே வந்து ஆயிரம், இரண்டாயிரம் என்று வோட்டுகள் பெற்று டெபாசிட்டையும் இழந்த காரணத்தால்தான் - காங்கிரசு பல இடங்களில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தப் பொதுத்தேர்தலில் காங்கிரசு பெற்ற வெற்றி கொள்கைக்காகப் பெற்ற வெற்றி யல்ல! பணத்தால் பெற்ற வெற்றி! அதிகார பலத் தால் பெற்ற வெற்றி ! மக்களை ஏமாற்றிய வகையால் பெற்ற வெற்றி !! ய காரைக்குடியிலே ராஜா சர். முத்தையா செட்டி யார் வெற்றி பெற்றார் என்றால், தனது கொள்கைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/8&oldid=1703195" இலிருந்து மீள்விக்கப்பட்டது