உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 எடுத்துக்காட்டியா? காங்கிரசிலேயிருந்து நாட்டுக் கும், மக்களுக்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை விளக்கிக் காட்டியா? இல்லை! இல்லவே இல்லை!! மந்திரி காமராசரைத்தான் எடுத்துக்கொள்ளு வோமே! எந்த வகையில் அவர் வெற்றி பெற்றார்? நாம் கேள்விப்படுகிறோம், அவரது தேர்தல் அலுவல கத்தில் காங்கிரசுக் கொடியைக்கூட ஏற்றுவதில்லை யென்று அந்தத்தொகுதி மக்களுக்கு உறுதியளித்து "நான் காமராஜ நாடாராக" நிற்கிறேன். நாடார் பெருமக்களே! நான் உங்கள் ஜாதிக்காரன், என்னை ஆதரிக்காவிட்டால் நம் ஜாதிக்கே ஆபத்து. எனக்கு வோட்டளிக்காவிட்டால் நம் குலத்திற்கே அவமானம் என்று" இத்தகைய பிரச்சாரத்தில் ஈடுபட்டு - காங் கிரசு கொடிக்குக்கூட மதிப்பளிக்காமல் - பலரும் பல விதத்திலே இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று செலவு செய்து -இவ்வளவுக்கும் பிறகு, கடைசியில் நான்காயிரம் வோட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதுபோலவே, காமராசர் இடங்களுக்கு அபேட்சகர்களைத் தேர்ந்தெடுத்த நேரத்தில், எல்லா இடங்களுக்கும் பெரிய பெரிய பணக்காரர்களை - ஜமீன்தார்களை நிறுத்தி-வோட்டு ஒன்றுக்கு ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று பணந் தர இயலுமா இவரால்? அந்த அளவுக்குச் சீமான் தானா ? என்று கணக்குப்போட்டு-நிறுத்திய காரணத் தால் தான் இந்தத் தடவை காங்கிரசு வெற்றிபெற முடிந்திருக்கிறதே அல்லாமல், தனது கொள்கைகளை காட்டி அல்ல, கருத்துக்களை எடுத்துச்சொல்லி அல்ல நாட்டுக்கு இன்னின்ன நன்மைகளைச் செய்து முடித் திருக்கிறேன் என்று விளக்கி அல்ல. வடநாட்டு ய பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/9&oldid=1703196" இலிருந்து மீள்விக்கப்பட்டது