உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 "எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல மையெழுதிக் கொள்வார்களே பெண்கள், அப்போது மைச்சிமிழை எடுத்து, அழகான மைக்கோல் ஒன்றை யும் எடுத்து. அந்தச் சிமிழிலே தோய்க்கிறாள். பார்ப்ப வளுக்கு - அப்போது தூர இருக்கிற அந்த எழுது கோல் கண்களுக்குத் தெரியும். அதாவது கணவன் தூர இருக்கும்போது அவனது குறைகள் மாத்திரம் தெரிவதுபோல. அதை எழுதுவதற்குக் கண் அரு கில் கொண்டுபோகும் போதோ கண்களுக்குத் தெரியாது. அதுபோலவே, கணவன் அருகிலே வந்த தும் அவனது பிழைகளும் தெரியாமல் மறைந்து விடு கின்றன. 66 ... எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழி காணேன் கண்டவிடத்து எத்தகைய அருமையான உதாரணம்? அது மாத்திரமல்ல, அந்தக் காதல் இலக்கணத்தில் எந்தப் புலவனும் கையாளாத முறையைக் கையாளுகிறார். இப்படித் தமிழகத்தினுடைய இல்வாழ்க்கையை யும், சமுதாய வாழ்க்கையையும் சிருட்டித்துக் காட்டிய வள்ளுவப் பெருந்தகையாளருடைய குறள் நாட்டு மக்களின் உள்ளத்திலே நல்ல முறையிலே ஒலிக்க வேண்டுமானால், அந்த ஓவியம் அவர்களது உள்ளங் களில் நல்ல முறையில் பதியவேண்டுமானால், அந்தக் குறளோவியத்தை மாணவர்கள் - பெரியவர்கள் தாய்மார்கள் - இந்த நாடு வாழவேண்டுமென்று விரும்புகின்ற அத்தனைபேர்களும்-"நாடுவாழ நலிவு போக விரும்புகிறவர்கள் அக்குறளை ஒரு நல்ல வேதப்புத்தகமாகக் கருதி - குறளோவியத்தின் வழி - . 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/51&oldid=1703238" இலிருந்து மீள்விக்கப்பட்டது