உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நெஞ்சத்தோடு எழுதியிருக்கிறார். இதைப் படிப்பவர் கள் எதிர்கால இளைஞர்கள். தமிழகத்துத் தவப்புதல் வர்கள். அவர்களுக்குத் தேவையானது காதல் வீரம் நாட்டுப்பற்று, அரசியல் முறை, குடும்பம் நடத்து கின்ற தன்மை, பண்பு, பழக்கம்-இத்தனையும் தேவை என்று கருதி அவர் எழுதுகிறார். இன்னுமொன்று அழகாகச் சொல்லுகிறார். அவர் எழுது கி ற கருத்தினைவிட எடுத்தாண்டிருக்கிற உவமை இருக்கிறதே-உதாரணம் இருக்கிறதே- அந்த உதாரணத்தை- தமிழகத்தின் சார்பில் அறை கூவலிட்டுச் சொல்லமுடியும். எந்த மேல்நாட்டுப் புலவனும் இதுவரை கையாண்டதில்லை. கணவன் வெளியூர் சென்றிருக்கிறான். தையலுக்கு அவன்மேல் ஆத்திரம். "வரட்டும் வரட்டும்! பார்த்துக்கொள்ளு கிறேன். எவ்வளவு காலம் பிரிந்திருக்கிறான் அவன். வந்ததும் எப்படி எப்படி கண்டிக்கிறேன் !' என்று அடுத்த வீட்டுத் தோழியிடம்-பக்கத்து வீட்டுப்பாங்கி யிடம் - எதிர்த்த வீட்டு ஏந்திழையிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். "என்ன பாடு படுத்துகிறேன் பார்! வாசலில் ஒருமணி நேரமாவது நிற்க வேண் டாமா?-காமி!சத்யபாமா கதவைத்திறவாய்! என்று பாட வேண்டாமா? பாடினாலும் கதவைத் திறப்பேனா கதவைத் திறந்தாலும் இரண்டுமணி நேரம் கண்ணைத் திறப்பேனா? என்றெல்லாம் சவால் தொடுத்துக் காண்டிருக்கிற மனைவி, கணவனை எதிரே பார்த்த தும் என்ன ஆகிறாள் என்பதை ஒரு நல்ல உதாரணத் தின் மூலம் வள்ளுவர் விளக்குகிறார். தூர இருந்த கணவன் அருகில் வந்ததும் அவனது குற்றங்களை எல்லாம் மறந்து விடுவாளாம் ! எப்படித் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/50&oldid=1703237" இலிருந்து மீள்விக்கப்பட்டது