உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு ' உள்ளக்களித்தலும், காண மகிழ்தலும் கள்ளுக்கு இல்லை. நல்ல குடிகாரனிடத்திலே போய், கள்ளுப் புட்டியை எதிரே வைத்து, எட்டிநின்று பார்க்கச் சொன்னால், அவன் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைய மாட்டான் அதைப்போல் 'கள்' என்று அவனிடம் சொன்னாலும், மனதால் நினைத்து மகிழ்ச்சியடைய மாட்டான். ஆனால், காதல் அப்படி அல்ல; அதை நினைத்தாலே மகிழ்ச்சியாம். இரண்டாயிரம் மைல் களுக்கு அப்பாலே இருக்கும் காதலியின் அழகான திருமுகத்தை எண்ணி-அவள் எழுதிய அந்த அழ மடலைப் பார்த்து-கையெழுத்திலே அவளது நீலக்குறு நயனங்களையும்-எ ப்படி த்தான் எழுதி னாளோ என்று எண்ணுகிற நேரத்தில் அவளது காந் தள் விரல்களையும்-பேனா பிடிக்கக்கூடிய நேரத்திலே அவள் கையிலே இருந்தது மயில் தோகையோ, அல் லது புறாவின் இறகோ என்றும் எண்ணி அத்தகைய களிப்பையும் உள்ளம் பெறுகிறதாம்-உள்ளம் களிக் கிறதாம்! கான - எ அவளைப் பூங்காவிலே காணுகிற நேரத்தில் அது மாடப்புறாவோ மனமோகன மயிலோ, குயிலோ என் றெல்லாம் எண்ணி-கண்டு மகிழ்தலும் காமத்திற்கு மட்டுமேதான் உண்டு. கள்ளுக்கு இல்லை. மாண வர்கள் பலருக்கு அது புரியாது; சுவைத்தவர்களுக் கும் - ரசித்தவர்களுக்கும் மட்டுமே அது புரியும். அந்த அளவுக்கு வள்ளுவர் அவரது வயது என்னவோ, அறுபது வயதிலேகூட எழுதியிருக்கலாம். ஆனாலும் இளம் உள்ளத்தோடு எழுதியிருக்கிறார். அந்த இன்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/49&oldid=1703236" இலிருந்து மீள்விக்கப்பட்டது