உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கொடு என்று கேட்கிற துணிவுடைமையும் வேண்டு மாம் - என்று மிக மிக அழகாக வள்ளுவர் சொல்லு கிறார். இவையெல்லாம் நீங்காத பண்புகளாக இருக்க வேண்டும் நிலத்தை ஆள்பவருக்கு. - க இந்த இரண்டு பால்களிலும் அரசியல் கருத்துக் களை அழகாக எடுத்துச் சொன்ன வள்ளுவர்-மூன்றா வதாக ஒருபால், முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கனாருக்குப் பிடிக்காத பால்- அந்தக் காமத்துப்பாலைப் பற்றி எழுதுகிற நேரத்தில் எவ்வளவு அழகாக இங்கிருக்கும் பெரியவர்கள் எல் லாம் அலுத்துச் சலித்து விட்டாலும் அந்தச் செய்தி கள் இப்போதும் ருசிக்கும்படியாக-மாணவர்கள் எல் லாம் கனவுகாணும் விதத்திலே-அதைச் சொல்லுகிற நானும், கேட்கின்ற கேட்கின்ற நீங்களும் தனிச்சுவையைக் காணுகின்ற விதத்திலே - இல்லறத்தின் மகிமையை இல்லறத்திலே இருக்கவேண்டிய காதலை மிகமிக அழகாகச் சொல்லுகிறார். யார் யாரோ என்னென்னமோ சொன்னார்கள் காதலைப்பற்றி! பக்கம் பக்கமாக எழுதினார்கள். மேல் நாட்டுப்புலவர்கள் எல்லாம்-இலக்கிய கர்த்தாக்கள் எல்லாம் - நூறு பக்கம், இருநூறு பக்கம் எழுதித் தீர்த் தால்கூட,காதலைப்பற்றி பரிபூரணமாக எழுதிமுடித்து விட்டோம் என்று அவர்கள் திருப்தியடையவில்லை. ஆனால்,வள்ளுவர் அப்படியில்லை. அந்த ஒரே அதி காரத்தில் இன்னும் சொல்லப்போனால் ஒரே குறளில் "லென்றால் என்ன ? என்று விளக்கி விடு கூட கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/48&oldid=1703235" இலிருந்து மீள்விக்கப்பட்டது