உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிந்த செங்கோட்டை என் அவைத்தலைவர் அவர்களே! இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப்பற்றி போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன். கவர்னர் அவர்களுடைய உரையைப்பற்றி இங்கு நண்பர்கள் அபிப்பிராயந் தெரிவித்த நேரத்தில்- எதிர்க்கட்சியினரைப்பற்றி இங்கு பேசப்பட்ட நேரத் தில் குறை கூறுவதையே எதிர்க்கட்சியினர் தொழி லாகக் கொண்டு பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது குறைகளை எடுத்துச் எடுத்துச் சொல்லி நிறைவேற்று வதற்காகத்தான் சட்ட மன்றத்திற்கு வந்திருக்கிறோமே தவிர செய்திருக்கிற காரியங்களைப் பன்னிப்பன்னிச் சொல்லி, அவைகளைப் பாராட்டு வதற்காக நாம் இங்கு வரவில்லை. அத்தகைய காரி யங்களுக்காக நடத்தப்படுகின்ற பாராட்டு விழாக்கள் எல்லாம், வெளியிலே அந்தக் காரியங்களால் பயன் பெறுபவர்களால் நடத்தப்படுவது மிகப் பொருத்த முடையது என்பதை நான் இங்கே குறிப்பிடாம லிருக்க முடியவில்லை. குறைகளை எடுத்துச் சொல்லி சரிசெய்து கொள்வதற்காகவே சட்ட மன்றத்திற்கு வந்திருக்கிறோம். மன்னராட்சியல்ல! மக்களாட்சி !! அந்தக் காலத்தில் மன்னர்கள், மக்களின் குறை களைத் தெரிந்து அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவ தற்கு இரவு நேரங்களில் "நகர்சோதனை" என்ற 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/53&oldid=1703240" இலிருந்து மீள்விக்கப்பட்டது