உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெயரால் மாறுவேடம் தாங்கி, மக்களைச் சந்தித்து. அவர்களுடைய குறைகளை எல்லாந்தெரிந்து, கொலு மண்டபத்தில் உட்கார்ந்து அந்தக் குறைகளைப் போக்கினார்கள் என்று பழையகாலச் சரித்திரத்தி லிருந்து படித்திருக்கிறோம். இது மன்னர்கள் ஆளும் காலமல்ல; மக்கள் ஆளுகின்ற காலம். இந்தக் காலத் திலும் மந்திரிகள் அதேபோல மாறுவேடம் தாங்கி மக்களின் குறைகளைக் கண்டுவர வேண்டுமென்று நான் கூறவில்லை. நாடகத்திலே அனுபவம் பெற்ற நாங்கள் ஒருவேளை ஆளும் கட்சியினராக வந்தால், அந்த வேடங்களைப் போட்டு மக்களின் குறைகளைக் கண்டுபிடிக்க முடியும். அந்த அனுபவம் இல்லாத மந்திரிகளை அதைச் செய்ய வேண்டுமென்று நா கோரமாட்டேன் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். வ ன் எதிர்க்கட்சி ஒன்று தேவை என்பது எதை யெடுத்தாலும் எதிர்த்துப் பேசுவதற்காக அல்ல என் பதை இங்கு பேசிய பலர் சுட்டிக் காட்டினார்கள். ஆளுகின்றவர்கள் யாரைத் துணைக் கொள்ளவேண்டு மென்பதைப் பற்றி வள்ளுவர் பெருமான் தனது திருக்குறளில், "பெரியாரைத் துணைகோடல் " என்ற அதிகாரத்தில் ஆளுகிறவர்கள், "பெரியாரைத் தம் முடைய துணைவராகக் கொள்ளவேண்டு " மென்று கூறியிருக்கிறார். எந்தப் பெரியாரைத் துணைகொள்ள வேண்டுமென்று கூறினார் என்றால், எதையும் "சரி,. சரி" யென்று சொல்லி கண்டிக்காமல் இருக்கின்ற பெரியாரை அல்ல. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்று வள்ளுவர் குறள் வகுத்திருக்கிறார். சபையில் ஆளு 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/54&oldid=1703241" இலிருந்து மீள்விக்கப்பட்டது