உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 70. பணம் தந்தேன் ? இவ்வளவு தானா உன் புத்திசாலித் தனம் ? " என்று தலையிலடித்துக் கொண்டு முதல் வனின் அறைக்குச் சென்றார். அங்கே அறை முழு தும் பரவி நின்ற ஒளி மழையைக் கண்டு வியந்தார்; அம்மகனின் அற்புதத் திட்டத்தை எண்ணிக் களித் தார். அதைப் போலத்தான் அறை முழுதும் தீபமளிக் கும் விளக்குபோல-தென்னகம் முழுதிற்கும் ஒளி தரும் திருவிளக்காகத் தோன்றுகிறார் நமது அறிஞர் அண்ணா அவர்கள். அப்படியானால் மறு அறையிலே அடைக்கப்பட்ட வைக்கோல் யாருக்குப் பொருந்தும் ........? நான் சொல்லத் தேவை இல்லை; நீங்கள் அரசியல் அறிவு படைத்தவர்கள்; புரிந்து கொள் வீர்கள்! இந்த நிலையில் தென்னகத்து ஒளி விளக்காக- தமிழகத்து இருள் போக்க வந்த உதய சூரியனாக- சட்ட மன்றம் முழுதும் ஒளி பரப்புகின்ற தீபத்தை- தமிழகத்துத் தலைவனை- தென்னகத்து வழி காட் டியை-திராவிடப் பெருங்குடி மக்களின் சாதுவனைச் சட்ட மன்றத்துக் கனுப்புகிறோம். என்றென்றும் தொண்டு செய்தே பழக்கப்பட்ட நாங்கள் சிலரும் உடன் செல்லுகிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலோடு தன். வேலை முடிந்து விட்டதென்று கருதும் இயக்கமல்ல; இனி ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே வேலை!'" என்று வாளாவிருந்து விடாது. திராவிட முன்னேற் றக் கழகம் தேர்தலுக்கு மாத்திரம் முளைத்த கட்சி யல்ல! எட்டு ஆண்டுகளுக்கு முன் நாம் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/70&oldid=1703256" இலிருந்து மீள்விக்கப்பட்டது