உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 நேரத்தில், இப்படி வளருவோம், வனப்போடும் வலி வோடும் நாட்டிலே நடைபோடுவோம் என்று கிஞ் சிற்றும் நினைக்கவில்லை. இதே சென்னை மாநகரத் திலேதான் அறிஞர் அண்ணா அவர்களும் நாமும் மழையோடு போட்டி போட்டு, கண்ணீர் சிந்திக். கொண்டு பெரியார் இராமசாமி அவர்களிடமிருந்து பிரிந்தோம். அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்களே, அது போல துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டோம்." இந்த. நாட்டுக்குத் தொண்டாற்றப்பட வேண்டியவர்கள் துரத்தப்படுகிறோம். அதுவும் தந்தையின் வீட்டி லிருந்தே விரட்டப்படுகிறோம். சாதாரணமாக அல்ல; நமக்குரிய பங்குத் தொகையான ஐந்து லட்ச ரூபாய் களை விட்டு விட்டு- அதைவிடச் சிறப்பு வாய்ந்த- விலை மதிப்பற்ற மாணிக்கமான தந்தை பெரியார் அவர்களையே பிரிகிறோம், கொள்கைக்காக; லட்சியத் துக்காக"-என்ற நினைவோடு இந்த நாட்டிலே நம் இதய கீதத்தை முழக்கிக்கொண்டு பிறந்தோம். பிறந்த எட்டு ஆண்டு காலத்தில்-வந்ததும வராதது மாகத் தேர்தலில் குதித்து விடவில்லையே நாம்! எட்டு ஆண்டு காலம் ஜனநாயக ரீதியிலே இயக்கத்தின் அரசியல் வாழ்க்கையை நல்ல முறையிலே வளர்த் துக்கொண்டோம். அந்த நேரத்தில் நமக்கு அர சாங்கம் தந்த தொல்லைகள் - எதிர்க் கட்சியினர் தொடுத்த தாக்குதல்கள் எவ்வளவு என்பதை இந்த நாடு மறந்தாவிட்டது? அப்பப்பா! எட்டாண்டுகள்!! எத்தனைத் துன்பச் சுமைகளைத் தாங்கிக் கொண் டோம்! அந்த எட்டாண்டு காலத்தில்தான் வட சென்னை பாண்டியனைப் பலி கொடுத்தோம்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/71&oldid=1703257" இலிருந்து மீள்விக்கப்பட்டது