உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இதுதான் இந்தத் தேர்தல் பிரவேசத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த பெரிய லாபம்! இது சாதாரணமாகப் பெறக்கூடிய லாபமல்ல ! எட்டு ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத் திய சேவை - போராட்டம்-மக்களிடம் கொண்டிருந்த தொடர்பு - இவைகளின் விளைவு! ய தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு, நாம் அபரிமிதமான வாக்குகள் பெற்றும், சிற்சில இடங் களில் தோற்றுவிட்டதை விரிவாக்கி - நம்மைத் தாக்கு கிறார்கள்! நாம் வெற்றிபெற முடியாதுபோன இடங்களில் காங்கிரசு பெற்ற வெற்றி எத்தகையது என்பதை நினைவுபடுத்திப் பார்க்கவேண்டுகிறேன். சென்னையிலே டி. டி கிருஷ்ணமாச்சாரி வென்றார் என்றால் எப்படி வென்றார்? தோழர் பி. பால சுப்பிரமணியம் அவர்கள் பத்தாயிரம் வோட்டுகள் அதிகமாக இருக்கிறார் என்ற செய்தி ஒன்றரை நாள் காட்டுத்தீ போல நாடெங்கும் பரவி இருந்தது. சென்னை நகரமே திரண்டு வாக்குகளை எண்ணுகிற இடத்தில் கூடியிருந்தது ஏறத்தாழ இரண்டு நாட் கள் டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் - இந்தியத் துணைக் கண்டத்தின் நிதிமந்திரி - புனுகுப் பூனையைப்போல தன் வீட்டுத்தாழ்வாரத்திலே சுற்றிசுற்றி - தேடாத தெய்வங்களையெல்லாம் தேடி-செய்யாத பிரார்த்தனை யெல்லாம் செய்து - நிலைதடுமாறி-தத்தளித்து நிற்க முடியாமல் - அங்கும் இங்கும் உலாவிக்கொண்டிருந் தார் என்றால், அப்படி அவரை உலாவ வைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே க உண்டு என்பதை யார் மறுக்கமுடியும் ? த க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/76&oldid=1703262" இலிருந்து மீள்விக்கப்பட்டது