உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 1 அதே நிலைமையில்தான் இராமசாமி படையாச்சி யாரும் வென்றிருக்கிறார். அவர் மந்திரி - ரத, கஜ, துரக பதாதிகள் உண்டு. எதிர்த்து நின்ற தோழர் கிருஷ்ணமூர்த்தி மாணவர் ஓட்டை உடைசல் பித் ளையைச் சார்ந்தவர் ! அங்கே பணபலம் உண்டு. இங்கே குணநலம் மாத்திரமே உண்டு. அங்கே படை வரிசை ஏராளம் இங்கே தடை மிக அதிகம். இந்த நிலைமையிலும் மயிரிழையிலேதான் தப்பியிருக்கிறார் இராமசாமி படையாச்சியார் ! இதற்கு என்ன பொருள் ? ஒரு மந்திரியை ஒருநாள் இரவு முழுவதும் கூண்டுப் புலியைப்போல உலவவிட்ட பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உண்டு என் தை யார்தான் மறுக்க இயலும் ? ப - க ? - இந்த அளவில் பொதுத் தேர்தலில் நாம் பெற் றிருக்கிற வெற்றி அடைந்திருக்கிற அனுபவம் செய்ய இருக்கிற தொண்டு இவை அடுத்த தேர்த லில் நமக்கு எப்படிப் பயன்படப் போகிறது என்ப தைச் சற்று உருவகப்படுத்திப் பாருங்கள்! இன்று கேரளம்! நாளை தமிழகம் ! காங்கிரசில்லாத மந்திரிசபை; ஏன் அமைய முடியாது? அதற்கான சூழ்நிலைதான் இன்று நாட்டிலே அரும்பியிருக்கிறது. நாம் நம்கோரிக்கைகளை மக்கள் மன்றத்திலேவைத்து பணிகளை விளக்கி கொள்கைகளை எடுத்துச் சொல்லி தொண்டுகளை விவரித்து வோட்டுகள் பெற் றோம். அப்படி வாக்குகள் பெறுவதற்கு தந்த வாக்கு களைக் காற்றிலே பறக்கவிட்டு விடமாட்டோம்! பத வியே பெரிதென்று இருந்துவிடமாட்டோம். பெரியார் அவர்கள் சொல்வதுபோல நூற்றைம்பது ரூபாய் பணத்துக்காக அல்லவே நாம் சட்டமன்றம் செல்வது? - க -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/77&oldid=1703263" இலிருந்து மீள்விக்கப்பட்டது