உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 82 தினரும் அவர்கள் பட்டியலைக் காட்டுகிறார்கள், பார்!! பார்! நூற்றைம்பது பேர்கள் என்று, ஆனால் மக்க ளுடைய உற்சாகம் கலந்த வரவேற்பும், வாழ்த்தும் அந்த நூற்றைம்பது பேர்களின் பக்கத்தில் இல்லை. இந்த பதினைந்து பேர்களுடைய பக்கத்தில் தானிருக் கிறது. , நாள்தோறும் பாராட்டு விழாக்கள், நாங்களே அலுத்துக் கொள்ளுகிற அளவுக்கு, "போதுமய்யா! பாராட்டுவது." என்று நாங்களே கூறுகிற அளவுக்கு நடைபெறுகிறது. இந்தப் பதினைந்தைத் திராவிடம் எப்படிப் பெற்றிருக்கிறது ? அந்த நூற்றைம்பதை அகில இந்தியா எப்படிப் பெற்றிருக்கிறது என் பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நாம் மிகத் தொல்லைகளுக்கிடையே, மிக மிகக் கஷ்டத்திற் கிடையிலே சம்பாதித்தது இந்தப் பதினைந்து, ஆழ மான கடலில் மூச்சடக்கி, பலப்பல சுறாக்களுக் கெல் லாம் தப்பி நன் முத்துக்களை எடுத்ததுபோல பதினைந்து முத்துக்களை எடுத்திருக்கிறீர்கள் நீங்கள்! அவர்களோ இந்த முத்தெடுக்கிற கஷ்டத்தை அந்த நூற்றைம்பது பேர்களைப் பொறுக்குகிற நேரத்தில் அனுபவிக்கவில்லை. தங்கச் சுரங்கத்திலே பாறைகளுக்கு இடையே, எந்த நேரத்தில் வெடித்திருக்கிற பாறைகள் திடீர் விபத்துக்காளாகித் தங்கமெடுக்கச் சென்றவன் இறந்து விடுவானோ, அழிந்து விடுவானோ. என்கின்ற கலக்கத்திற்கிடையே - உள்ளே நுழைந்த தொழி லாளி பாறைகளை வெட்டி வெட்டப்பட்ட பாறை களிலே எந்த அளவுக்குத் தங்கம் கலந்திருக்கும் என் - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/82&oldid=1703268" இலிருந்து மீள்விக்கப்பட்டது