உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இந்தப் போராட்டத்திலே. இவர்கள் சிறைக்குச் சென்றார்கள். அந்தப் போராட்டத்திலே அவர்கள் சிறைக்குச் சென்றார்கள் என்ற காரணம் காட்டி நாங் கள் சிறைக்குச் சென்று விடுதலையடைந்து வருகின்ற நேரத்திலே, விடுதலை விழாக்கள் நீங்கள் நடத்தத் தான் போகிறீர்கள். நாங்கள் மறந்துவிடமாட்டோம்! தேம்பியழுகின்ற எங்கள் தாயை மறந்துவிட மாட் டோம்! விலங்கு கையிலே ஏந்தியிருக்கிற, எங்களைப் பெற்ற மாதாவை மறந்துவிடமாட்டோம்! எங்களைப் பெற்ற மாதா, தங்க நிறம் உடையவள் கோலாரிலே ! தங்கம் குவிந்து கிடக்கிறது. அவளைச் சுற்றிலும். - மூன்று பக்கங்களிலும் பெரிய கடல்கள்! அவை களிலே முத்து குலுங்கிக் முத்து குலுங்கிக் கிடக்கிறது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு வற்றாத வளமுள்ள நதிக ளிருக்கின்றன. இவைகளெல்லாம் இருந்தும் - எங்கள் மாதா அடிமையாம்! அடிமையாம்!! காமராசர் எழுகின்ற நேரத்திலும், என்றைக்காவது எழுந்தால் - சுப்பிரமணியம் பேசுகின்ற நேரத்திலும்,- பக்த வத்சலம் எங்களைப் பார்த்து மிரட்டுகின்ற நேரத்தி லும்-காங்கிரசுக்காரர்கள் உறுமுகின்ற நேரத்திலும், நம் தாய் அடிமையாகிக் கிடக்கிறாள் - அவள் கூண் டிலே பூட்டப்பட்டுக் கிடக்கிறாள்-அவளை விடுவிக்க வேண்டிய பெரும் பொறுப்பிலே நாங்கள் இருக்கிறோம் என்பதை எள்ளளவும் நாங்கள் மறந்துவிடமாட் டோம். நாங்கள் உங்களவர்கள். தமிழர்கள். திராவிடர் கள். இந்தத் தரணியின் சொந்தக்காரர்கள் தரணியை மீட்டிடும் கவலையை மேற் கொண்டிருப்பவர்கள். அதற்காகவே, இத்த உயிரிருக்கிறது - அதற்காகவே இந்தக் கண்கள் இருக்கின்றன-அதற்காகவே இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/92&oldid=1703641" இலிருந்து மீள்விக்கப்பட்டது