உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 97 - அது ஹிட்லர் கேட்டான்; சர்வாதிகார வெறியர்கள் எல் லாம் கேட்டார்கள் இப்போது காங்கிரசார்களும் கேட்கிறார்கள்! என்ன அர்த்தம் அதற்கு? மாத்திரமல்ல, எதிரிலே உட்கார்ந்திருக்கிற எதிர்க் கட்சிக்காரர்கள் எல்லாம் யார் தெரியுமா ? இவர்க ளெல்லாம் வெள்ளைக்காரன்-அயல் நாட்டுக்காரர்கள் இந்த நாட்டிலே தங்க வேண்டுமென்று சொன்னவர் கள், என்று குறிப்பிட்டார்கள் -அதற்கு நம்முடைய அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் இன்று காலையிலே சட்ட மன்றத்திலே; வெகு அழகாகப் பதில் சொன்னார்கள். "காங்கிரசு நண்பர்கள் எதிர்க் கட்சிக்காரர்கள் எல்லாம்.ஆங்கிலேயனது அடிவருடி கள் என்று குறிப்பிட்டார்கள். அப்படி அவர்கள் சொல்லிய நேரத்தில் எதிர்க் கட்சியிலிருந்த எங்கள் முகங்கள், சுருங்கியதைவிட - காங்கிரசுக் கட்சியிலே யிருந்த பலருடைய முகங்கள் சுருங்கியதைச் கண் டோம்" என்று, அங்கேதான் வெள்ளைக்காரனுடைய நிரந்தர ஏஜண்டாக இருந்த செட்டி நாட்டரசர் இருக்கிறார்; ஜஸ்டிஸ் கட்சியினுடைய தலைவராக இருந்த சாமியப்ப முதலியாருடைய மகன் இராம லிங்கம் உட்கார்ந்திருக்கிறார். ஆர் கே. சண்முகஞ் செட்டியாருடைய அருந்தவப் புதல்வி சாவித்திரி சண்முகம் அமர்ந்திருக்கிறார். நூற்றைம்பது பேர் களில், நூறு பேர்கள் காங்கிரசை எதிர்த்தவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மீதி ஐம்பது பேர்களிலோ மில் முதலாளி இருபது பேர்கள் இருப்பார்கள். ஒரு காமராசர், ஒரு சர்தார் வேதரத்னம், இப்படிப் பொறுக்கி விடலாம் உண்மையர்ன காங்கிரசுக்காரர் கள் இவர்களென்று. ய . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/97&oldid=1703646" இலிருந்து மீள்விக்கப்பட்டது