உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ? தில்லையாடி வள்ளியம்மை பரம்பரை அங்கு இருக்கிறதா ? செக்கிழுத்த சிதம்பரனாரின் வம்சம் இருக்கிறதா அங்கே? பகவத்சிங்கின் பரம்பரையைக் காணமுடியுமா அங்கே? திருப்பூர் குமரனின் சந்ததி இருக்கிறதா ? கிடையாது, கிடையாது. தேர் தலிலே பத்து லட்சம் வரை செலவழிக்கும் தகுதி பெற்றவர் களும்; ராஜாக்களும்; சர்களாக இருந்தவர்களும்; திவானாகப் பவனி வந்தவர்களும் இன்றைய தினம் காங்கிரசு கொலுமண்டபத்தில் வீற்றிருக்கிறார்களே ஒழிய, உண்மையான காங்கிரசுக்காரர்கள் அங்கு எத் தனை பேர்கள் இருக்கிறார்கள்? ஆகவேதான் சொல்லு கிறேன் - இந்த விஞ்ஞான முறை இருதயம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தாங்காது, தாங்காது என்று. ஆனால். திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிற இந்தப் பதினைந்தும் வளரக் கூடிய வித்தைக் கொண்டது வளரக் கூடிய ஆற்றல் பெற்றது - அப்படி வளர்ந்து இந்தப் பதினைந்து, நிச்சயமாக நூற்றைம்பதாகும் அதற்கு மேலுமாகும். அதை அப்படி ஆக்குகிற பெருமை - ஆக்குகின்ற கடமை - உங்கள் கையில் இருக்கிறது. பதினேழு லட்சம், கோடியா க மாறவேண்டும் கோடானு கோடியாக மாறவேண்டும். தென்புலத் திலே இருக்கிற திராவிட மக்கள் அத்தனை பேர் களும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய விடுதலைச் சேனைக்குத் தங்களுடைய கையை உயர்த்தி ஆதரவு கொடுத்து விட்டார்கள். சிகப்பும், கருப்பும் கலந்த அந்தக் கொடியின் கீழே, திராவிடப் படை வீரர்களுடைய அணிவகுப்பு - திராவிடத்தைப் பெற்றே தீர்வோம் என்று வடக்கு நோக்கிக் குரல் - 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/98&oldid=1703647" இலிருந்து மீள்விக்கப்பட்டது