பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி திருப்பாசுரங்களை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். இந்நிலையில் பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் திருப்பாடல் நினைவிற்கு வர, அதனையும் உள்ளம் உருக ஒதுகின்றோம். வணங்கேன் பிறதெய்வம் மாலடியார் அல்லாக் குணங்கேடர் தங்களுடன் கூடேன்-இணங்கிநின்று வைகுந்த விண்ணநகரம் வாழ்த்துவேன் ஈதன்றோ வைகுந்த விண்ணகர வாழ்வு." (பிறதெய்வம் - திருமாலல்லாத பிறதெய்வங்கள்; மால் - திருமால்; குணம் கேடர் - நற்குணமில்லாதவர்; இணங்கி - கூடி நின்று; வாழ்த்துவேன் - துதிப்பேன்) என்பது பாடல். "வைகுந்தத்திற்குச் சென்றாலும், அங்கு உண்டாகும் நம்வாழ்வு திருமாலடியார்களுடன் நித்தியர் முத்தர்களுடன் கூடி எம்பெருமானைத் துதித்தலேயாகும். அதனை இப்பூவுலகத்தில் வைகுந்த விண்ணகரத்தில் செய்து அதனை யொத்த பேற்றினை அடைவேன்” என்கின்றார். மனநிறைவுடன் திருச்செம்பொன்செய் கோயிலுக்கு வருகின்றோம். 5. நூற். திரு. அந்: 31