பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X ஆசிரியப் பெருந்தகை ஜெரோம் டிசெளசா பாதியாரின் (முதல்வர், லயோலா கல்லூரி, சென்னை) துணையால் பல்கலைக் கழக விதி மாற்றப்பட்டது. அவர் நாலாண்டுகள் தொடர்ந்து வற்புறுத்தியதால், இந்த நாலாண்டுக் காலத்தைக் கொன்னே கழிக்காமல் வித்துவான் தேர்வில் (1945) வெற்றி பெற்றேன். விதி மாறிய ஆண்டில் (1947) பி.ஏ. தேர்வு எழுதி தமிழில் பல்கலைக் கழகத்தில் முதல் வகுப்பில் முதல் நிலை அடைந்தேன். எம்.ஏ., எழுது முயன்றபோது பி.ஏ. பட்டம் பெற்ற பிறகு இரண்டாடுகள் இடைவெளி வேண்டும் என்ற விதி குறுக்கிட்டது. பொறுத்திருந்து 51 இல் எம்.ஏ. பட்டம் பெற்றேன். எம்.ஏ. பட்டம் பெறவே பத்து ஆண்டுகள் கழிந்தன. போனால் போகட்டும். அறிவியலில் தீவிர நாட்டம் கொண்ட என்னைத் தமிழன்னை ஆட்கொண்டாள். வறுமையில் வாடுகின்றவனுக்கு அறிவியலில் உயர்வு ஏது? தமிழ்தான் இவர்களைக் காப்பாற்றுகின்றது. வறுமையின் இளமை வாடிய சினையவாய் (கலி-10) என்று கலித்தொகை ஆசிரியர் கூற்றின் உண்மைப் பொருள் எனக்கு விளக்கம் உற்றது. ஒன்பதாண்டுகள் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு, காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் என் வாழ்க்கைத் தொடங்கியது. இங்குப் பணியாற்றிய பத்தாண்டுக் காலத்தில் பல்வேறு முறைகளில் முயன்றேன் பிஎச்.டி பட்டத்திற்குப் பதிவு செய்து கொள்ள. கல்வித் துறையிலாவது பெறலாம் என்று முயன்றும் பலன் கிட்டவில்லை. எம்.ஏ. பயிற்றும் கல்லூரியில் அல்லது பல்கலைக் கழகத்தில் நுழைந்துகொண்டு முயலலாம் என்று கருதிய முயற்சி பலன் தரவில்லை. எனக்கு ஆசி கூறுவதற்கு பெரியவர்கள் இலர் என் செய்வது? அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே” என்று ஏழுமலையானைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அவன் திருவடிவாரத்திலேயே பணியாற்றத் தொடங்கினேன். இங்கும் பதிவு செய்து கொள்ள முயன்றேன். முயற்சி பலன் தரவில்லை. தமிழ் Faculty இல்லாததால் (எம்.ஏ. இல்லாததால்) வழி இல்லாது போயிற்று. பல பல்கலைக் கழகங்களில் தக்க வழிகாட்டியுள்ள துறையில் பிற துறை மாணாக்கர்கள், ஆசிரியர்கள் பதிவு செய்து கொள்ளும் விதியை எடுத்துக் காட்டினேன் துணை வேந்தருக்கு. வடமொழித் 2. திருவாய். 6-10:9