பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருத்தெற்றியம்பலத்துச் செங்கண்மால் திருமந்திரத்தின் முதற் பதமாகிய 'ஓம்' என்ற பிரணவத்தின் பொருளைச் சிந்திக்கின்றோம். பிரணவம் ஒன்றுமே சகல வேதசாரமாகும். இதன் பொருளை நன்கு உணர்ந்தால் இறைவனுடைய தன்மையையும் சீவனாகிய தன்னுடைய தன்மையையும் நன்கு அறியலாம். இதனால் 'நான் என்ற அகங்காரமும் 'எனது என்ற மமகாரமும் ஒழியும்; ஒழியவே சம்சாரக் கடலினின்றும் கரையேறப் பெறலாம். பிரணவத்தை ஓர் ஆதாரத்தில் எழுதினால் வலம்புரிச் சங்கம்போல் காணப்பெறும். இந்தப் பிரணவம் பிரிந்த நிலையில் 'அ, உ, ம' என்ற மூன்று எழுத்துகளாக இருக்கும். இதில் அகாரமே முதல் எழுத்தாகும். வடமொழியில் 'அவ்' என்னும் தாது (வினைப்பகுதி) காத்தல் என்ற பொருளைத் தரும். வடமொழி இலக்கணப்படி 'அவ்' என்னும் வினைப்பகுதியின் மீது தக்க விகுதி பெற்றுத் தேறிய அகாரம் அனைத்தையும் காக்கும் எம்பெருமானைக் கூறும். இந்த அகாரத்தின்மேல் நான்காம் வேற்றுமையுருபு (சதுர்த்தி) ஏறிப் பின் அழிந்துள்ளது. இதன் பொருள் சேவியைப் பெருமைப்படுத்தும் தன்மையாகும். இதுவே சேஷத்துவம் ஆகும். பிரணவத்தில் இரண்டாவது எழுத்து உகாரம். இதன் பொருள் மற்றொன்றினுடைய சம்பந்தத்தை மறுத்தலாகும். இங்கு எம்பெருமானைக் கூறும் அகாரத்துடன் உகாரத்தைச் சேர்த்துப் பொருள்படுத்தும்போது எம்பெருமானையன்றி மற்றொருவனுக்கும் அடியனல்லன் என்று பொருள்படும். இந்த உகாரத்திற்கு இன்னொரு பொருளும் உண்டு. பகலவனும் அவனது ஒளியும் பிரியாதிருப்பது போலவே, எம்பெருமானும் எம்பெருமாட்டியும் கணநேரமும் பிரியாது நின்று உலகத்தைக் காத்து வருகின்றனர். பிரணவத்தின் மூன்றாவது எழுத்து மகாரம். அதன் முன்பு அகாரம் மகாரம் என்ற இரண்டு