பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெற்றியம்பலத்துச் செங்கண்மால் 103 எழுத்துகள் உள்ளன. உகாரத்திற்குப் பிராட்டி என்ற ஒரு பொருள் உண்டு. அகாரமோ எம்பெருமானைக் கூறும். ஆகவே அகாரமும் உகாரமும் சேர்ந்து திவ்விய தம்பதிகளை உணர்த்தும். மகாரம் சீவனைக் கூறும். தத்துவசார சம்ஹிதை முதலிய நூல்களில் மகாரம் சீவனைக் கூறுவதாக நுவலப் பெற்றுள்ளது. மேலும் மந்' என்ற வினைப்பகுதியிலிருந்து மகாரம் தோன்றுகின்றது. இந்த வினைப்பகுதி ஞானம் என்ற பொருள் கொண்டது. இந்தப் பகுதியிலிருந்து தோன்றிய மகாரம் ஞான சொருபனாய் நிற்பவன், ஞானத்தைக் குணமாகக் கொண்டவன் என்ற பொருள்களைத் தந்து அங்ங்னல்லாத அசேதநனத்தினின்றும் வேறுபட்டு நிற்கும் சீவனைக் கூறுகின்றது. மேலும் மஸ் என்னும் வினைப் பகுதியிலிருந்தும் மகாரம் தோனறும். இந்த வினைப்பகுதிக்கு அளவு என்று பொருள். மற்ற பிரமாணங்களால் 'அணு' என்னும் அளவில் நின்று மகாரம் அணுவான சீவனைக் காட்டுகின்றது. இதனால் எங்கும் நிறைந்து நிற்பது பற்றி விபு எனப்படும் ஈசுவரனைக் காட்டிலும் அணுவான சீவன் வேறுபட்டவன் என்பதாகின்றது. இக்கருத்துகளை வேதாந்த தேசிகர், காரணமும் காவலனும்ஆகி என்றும் கமலையுடன் பிரியாத நாதனான நாரணனுக் கடியேன்நான் அடிமை பூண்ட நல்லடியார்க் கல்லால்மற் றொருவர்க் கல்லேன் ஆரணங்கள் கொண்டகமும் புறமும் கண்டால் அறிவாகி அறிவதுமாய் அறுநான்கன்றிச் சீரணிந்த சுடர்போலத் திகழ்ந்து நின்றேன் சிலைவிசயன் தேரனைய சிறுவே தத்தே." (காரணம் - மூல காரணம்; காவலன் - இரட்சகன் கமலை - இலக்குமி, நாதன் - சவாமி, அடியார் - பாகவதர், ஆரணங்கள் - வேதங்கள்; அறிவு - ஞானம்; அறிவதுமாய் - தர்மபூத ஞானத்தால் பிறவற்றை அறிபவனுமாய்; அறுநான்கு - 24 தத்துவங்கள்; சீர் - சிறப்பு) என்ற பாடலால் விளக்குவர். சர்வேசுவரன் எல்லாவற்றுக்கும் முதற் காரணமாக நிற்பவன்; அனைத்தையும் காண்பவன்; பிராட்டியை ஒருபோதும் பிரியாதவன்; சேதநனாகிய சீவன் ஞான சொரூபமாய் நிற்பவன்; ஞானத்தைக் குணமாகவும் கொண்டவன்; அசேதநத்தைக் காட்டிலும் வேறுபட்டு நிற்பவன். இத்தகைய சீவன் எம்பெருமானுக்கு அடியன்; அவனுடைய அடியார்கட்கும் அடியன்; வேறொருவனுக்கும் அடியன் அல்லன். இதுவே பார்த்தன் தேர் போன்ற பிரணவத்தின் சாரம். இதுவே வேதங்களால் ஆய்ந்து கண்ட பொருளுமாகும். 1. சேஷி - ஆண்டான், தலைவன் 2. சேஷத்துவம் - தலைமைத் தன்மை 3. தேசிகப் பிரபந்தம் - 97