பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி என்று கூறும் முமுட்கப்படி. இதனைச் சற்று ஆழ்ந்து சிந்திப்போம். பிராட்டியார் சேதநனுடைய துன்ப நிலையைக் கண்டு மனமிரங்கி அவனை ஏற்றுக் கொள்ளுமாறு எம்பெருமானுக்குப் பரிந்துரைக் கின்றார்; புருஷகாரம் செய்கின்றார். இந்த நோக்குடைய அவர் சேதநனுடைய குற்றங்களை அவனுடைய திருக்குறிப்பிற்குக் கொண்டுவரமாட்டார் என்பது உறுதியே. ஆயினும், எம்பெருமான் மனத்தில் இவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தை ஊன்றுவிப்பதற்காக ஒருகால் சில சிறு குற்றங்களை எடுத்துரைத்தல் கூடும். இங்ங்னம் உரைக்கும் முறையில் பிராட்டியார் கைவிடுவர். அந்தச் சேதநனிடம் ஊன்றிய அன்பு கொண்ட எம்பெருமானும் தனக்குள்ள வாத்சல்யம் முதலிய குணங்களால் என்னடியார் அது செய்யார், செம்தாரேல் நன்று செய்தார் என்று கூறி அவனை ஏற்றுக்கொள்ள முன்வந்து நிற்பன். ஆயினும், அவனும் ஒருகால் கைவிடுவதுண்டு. இங்ங்னம் சேதநனுக்கு நன்மையே புரியவல்ல இருவரும் கைவிடினும் தம் அழகினால் சேதநனை அப்புறம் செல்லாதவாறு அகப்படுத்திக் கொள்ளும் அவனுடைய இணைத் தாமரையடிகளோ சேதநனைவிடாது பற்றிக்கொள்ளும் திண்ணம் வாய்ந்தன வாயிருக்கும். இதனைத் திருவுள்ளங் கொண்ட நம்மாழ்வாரும், - “ஈறுஇல வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே” என்று கூறியருளினார். சேஷபூதனுடைய சொரூபத்தை நோக்கினாலும் அவன் இறங்குந்துறை எம்பெருமானுடைய திருவடிகளேயாகும். இதைப் பிள்ளை உலக ஆசாரியர் ஓர் அழகிய எடுத்துக்காட்டால் விளக்குவர். “சேவிபக்கல் சேஷபூதன் இழியுந்துறை, ப்ரஜை முலையிலே வாய்வைக்குமாப் போலே” (சேஷி - தலைவன்; சேஷபூதன் - அடியான்; ப்ரஜை - குழந்தை.) பாலுண்ணும் பச்சைப் பசுங்குழவி எங்ங்னம் அன்னையின் பிற உறுப்புகள் யாவையும் விட்டுத் தான் உயிர்வாழ்வதற்கு இடனாக உள்ள அவளுடைய கொங்கையிலே வாய் வைக்கின்றதோ, அங்ங்னமே தலைவனாகிய எம்பெருமானைப் பற்றப் புகும் அடியானும் எம்பெருமானுடைய பல உறுப்புகளையும் விட்டுத் தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவனுடைய திருவடிகளையே பற்று 4. திருவாய் 1-2:10 5. மேலது - 147