பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திர கூடத்துச் செங்கண்மால் 3 கின்றான். குழந்தை முலையைப் பற்றுதலும் அடியான் திருவடியைப் பற்றுதலும் அவரவருவருடைய சொருபத்திற்கு இயல்பாய் அமைந்ததாகும். அயிந்தை அண்ணலைச் சேவித்த நாம் சித்திரகூடத்துச் செங்கண்மாலை வழிபடும் நோக்கத்துடன் கடலூரிலிருந்து சிதம்பரத்தை நோக்கி இருப்பூர்தியில் வருங்கால் இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் அலைபாய்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சிதம்பரம் நிலையத்தில் இறங்கி நிலையத்தின் அருகிலுள்ள விடுதிக்குச் செல்லுகின்றோம். நன்னீராடித் தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு தில்லைச் சித்திரகூடம் என்ற திருக்கோயிலுக்குப் போகச் சித்தமாகின்றோம். போகும்போதே திருக்கோயிலின் பெயர் ஆராய்ச்சியில் நம் மனம் ஈடுபடுகின்றது. ஆதியில் இத்தலம் தில்லை (Excoecaria Agallocha Linn) 676öıp G(5616035i 14ĝ5ứ# Gerigæsir நிறைந்த வனமாயிருந்தமையின் தில்லை என்ற பெயர் பெற்றது. சித்திரகூடம் என்பது விசித்திரமான சிகரங்களையுடையதெனப் பொருள்படும் காரணப் பெயர். இஃது இராமபிரான் வனவாசம் செய்த காலத்து அவனது திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருந்தவொரு மலை; அதனைப் போலவே இத்தலமும் எம்பெருமானுடைய திருவுள்ளத்திற்கு மிகவும் பாங்காயிருப்பது பற்றி அப்பெயரே இதற்கும் இடப்பெற்றது போலும். இந்தச் செய்தியை நினைத்தவுடன் சீதாப் பிராட்டியுடன் இராமபிரான் சித்திர கூட மலையில் இருந்த பொழுது பிராட்டிக்குப் பெருமான் சித்திரகூடக் காட்சிகளைக் காட்டுவதாக அமைந்த கம்பன் பாடல்களில் ஆழங்கால படுகின்றோம். திருமணமானவுடன் அயோத்தியை அடைந்து அரக்கர் பாவத்தாலும் அல்லவர் இயற்றிய தவத்தாலும் நாடாளும் பொறுப்பை விட்டுக் கானாளச் சென்ற காகுத்தனின் தேன் நிலவுக் (Honey Moon) காட்சிகளன்றோ இவை? இக்காட்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் திருக்கோயிலுக்குப் போகுமாறு “தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே என்று ஒரு முறை க்கு ஒன்பது முறையாக ஆற்றுப்படுத்தும் திருமங்கையாழ்வாரின் பாசுர ஒலி நம் சிந்தையில் ஒலித்துக் கொண்டிருக்க நாம் கீழைக் கோபுர வாயிலை அடைகின்றோம். பல மண்டபங்களையும் தாண்டி எம்பெருமான் சந்நிதிக்கு வருகின்றோம். 6. இது கடலுர் மயிலாடுதுறை இருப்பூர்திப் பாதையில் உள்ளது.