பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

பெயர் மானாவதாரன் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. ஜயதரன் என்பது முதற் குலோத்துங்கனயும், மானாவதாரன் என்பது இம்மணவிற் கூத்தனையும் குறிக்கும்.

திருவாரூரில் விக்கிரம சோழனுடைய நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று உள்ளது. அக் கல்வெட்டினால்,திருநல்லூர்ச் சபையினர் இரண்டேமுக்காலே சின்னம் பரப்புடைய நெடுங்குளம் ஒன்றை அரும்பாக் கிழானுக்கு நூறு காசுக்கு விற்றனரென்றும், அரும்பாக் கிழான் அதைப் பெற்றுத் திருவாரூர்த் திருமூலட்டான முடையார்க்குச் செங்கழுநீர் மாலைகள் அளிக்க ஏற்பாடு செய்தான் என்றும் அறிய வருகிறது (563 of 1904.)

திண்டிவனம் என்ற வூரிலுள்ள விக்கிரம சோழனுடைய 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுள்ளது. அவ்வாண்டில் அரும்பாக்கிழான் 120 அன்றாடு நற்காசு கொடுக்கக் கிடங்கிலான இராசேந்திர சோழ நல்லூர் என்னும் ஊரவர் திருத்திண்டீசுவரம் உடையார்க்கு 6- வேலி நிலம் நீர்ப்பாசன உரிமைகளுடன் விற்றுக் கொடுத்தனர். நிலத்துக்கு விலை இருபது காசு. எஞ்சிய நூறு காசுக்குரிய வட்டியைக் கொண்டு அந்நிலத்துக்குச் செலுத்த வேண்டிய திருவெழுச்சிக் குடிமை, பெருவரி, சில்லிறை, வெட்டிமுட்டையாள் முதலியவற்றை ஊரவரே செலுத்த ஒப்புக்கொண்டனர். நத்தக் கொல்லையையும் பத்துக்காசுக்குக் குடிகள் குடியிருக்க விற்றுக் கொடுத்தனர். அந்தக் கொல்லைக்கு உப்புக்காசு, செந்நீர் அமஞ்சி, திருவெழுச்சிக் குடிமை முதலாகிய வரிகள் நீக்கப்பட்டன (205 of 1902; S. I. 1. Vol VII No 832).

திருபுவனி என்ற புதுச் சேரிக் கண்மையிலுள்ள ஊரில் விக்கிரம சோழனின் ஆறாம் ஆட்சியாண்டிற்குரிய