பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

செயல் நிறைவேறும் ; இச்செயல் நிறைவேறாது என எண்ணிக் காரியங்களைச் செய்ய வேண்டும்’ என்றும், “ஒரு பொருளைப் பெற்றால் அதனால் பயனில்லை யென்றால் மறந்தொழிதல் வேண்டு மென்றும், பகைவரை இன்ன சமயத்தில் சென்று பொருதால் வெற்றி எய்தலாம்’ என்றும், புகழெய்தற் குரிய காரியங்கள் இன்னவை” என்றும், இன்ன காரியங்களைச் செய்யின் உறுதியாகப் பொருள் வரும்’ என்றும், இன்னோரன்னவற்றைத் தம் அரசனாகிய அநபாய சோழனுக்கு அறுவுறுத்தி வந்தார்.

பெரிய புராணம் பாடியமை

அந்நாளில் பலரும் ஐம் பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சீவகசிந்தாமணியைக் கற்று அதன் சுவைகளை நுகர்வாராயினர். அங்ஙனமே அரசனாகிய அநபாயனும் அந்நூலையே பெரிதும் பாராட்டிக் கேட்பானாயினான். சேக்கிழார் அரசனை நோக்கிச், ‘சமணப் பொய்ந் நூல் இது ; மறுமைக்கு ஆகாது ; இம்மைக்கும் அற்றே , வளம் மருவு சிவகதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி” என்று புகன்றார். சேக்கிழார் பிள்ளைத்தமிழாசிரியரும் இச் செய்தியைப் பின் வருமாறு கூறியுள்ளார்:-

”கார்கொண்ட அமணசிந் தாமணியை வளவர்கோன்
கங்குல்பகல் ஆராய்தரக்
கண்டொழித் தாவதிது வேயென்று தொண்டர்தம்
மகத்துவங் கருதவுய்த்துப்
பார்கொண்ட மன்னரல் லவைநீக்கி நல்லவை
பரித்திடச் செயலமைச்சர்
பண்பெனத் தெரித்தகுன் றத்தூ ருதித்தவெம்
பரமனைக் காக்கவென்றே” (காப்புப்பருவம், 8.)

அரசனும் இது பயனற்ற கதையானால் அம்மையும் இம்மையும் உறுதி பயக்கத்தக்க சிவகதை யாது ? அதனை