பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

யாவரும் ஒருங்கு சென்று நடராசப் பெருமானை வணங்கினர். நடராசப் பெருமானும், இந்நூலை அரங்கேற்றுக என அருள் செய்தார் ; திருச்சிலம் பொலியும் உடன் கேட்டது. அரங்கேற்றத்துக்குத்,

”திருநெறித்தமிழ் வல்லபேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்
கருநெறிப்பகை ஞானநூல்பல கற்றபேர்மறை கற்றபேர்
குருநெறிக்குரி யோர்இலக்கண லக்கியங்கள் குறித்தபேர்
பெருநெறிப்பல காவியங்கதை பேசவல்லவ ரனைவரும்.[1]

வந்திருந்தனர். சேக்கிழார் பெருமான் சித்திரைத் திங்கள் ஆதிரைநாள் தொடங்கி எதிராம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஆதிரை வரையிலும் தாம்செய்த சிவகதையினை விளங்க விரித்துச் சொல்ல அடியாரெல்லாம் சுருதி மொழி இதுவெனக் கை தொழுது, நெஞ்சம் கனியக் கனியக் கண்ணீர் வாரக் கேட்டனர்.

அங்ஙனம் கேட்டவர்கள்[2] சேக்கிழாரை, நாடிய விரி நூல் சொற்றிடு திறனால் நன்னூலாசிரியன்’ என்று புகழ்ந்தார்கள். 'நகு பாசுரமுதல் உரை செய்தலினால் நவில் உரையாசிரியன் என்று சில ரியம்பினர். “பரசமயக் குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனை செய்நிலையால் போதகாசிரியன்’ என்று சிலர் புகழ்ந்தனர். சிலர் இவர் பாடல்களை ‘அத்தி தருங்கவி‘ [3]என்றனர். வேறுசிலர் ‘புத்திதருங்கவி‘ எனப் புகன்றனர். மற்றுஞ் சிலர் ‘சித்தி தருங்கவி’


  1. திருத் தொண்டர் புராண வரலாறு செய்யுள், 77
  2. சேக்கிழார் பிள்ளைத் தமிழ், சப்பாணிப் பருவம் செய்யுள் 29.
  3. அத்தி தருங் கவி-முப்பொருள் உண்மையைக் கூறும் கவி‘