பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

சோழர் சரித்திரம்

________________

கோச்செங்கட் சோழர் 95 சோழர் போரிலும் இவர் பகையாசரை முறியடித்தனரென்பது தெரி கின்றது. இவ்வாற்றால் சேர, பாண்டிய மன்னர்கள் இவ ருடன் போர்புரிந்து தோற்றுக் கீழ்ப்படிந்தாபாதல் வேண் டும். மேற்குறித்த பதிகத்தில் திருமங்கை மன்னன் இவ ரைத் தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணிமாடம்' என்பதனால் மூன்று நாட்டிற்கும் உரியராகக் கூறுவதும், சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையில் தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடி யேன்' என்று கூறுவதும் இங்கே கருதற்பாலன. திருமங்கை மன்னன் இவரைப் புகழ்ந்து கூறுவதி லிருந்து, இவர் அரசாதற்கேற்ப வேறு மதங்களையும் புரந்து வந்தன ரென்பது பெறப்படும் ; எனினும் இவர் செய்த தொண்டுகளெல்லாம் சிவபெருமானுக்கேயாகும். இவர் சிவ பெருமானுக்கு ஆனைக்கா முதல் அம்பர் இறுதியாக அறு பத்துநான்கு மாடக்கோயில்கள் கட்டின சென்று சில பெரி போர் கூறுகின்றனர். திருமங்கையாழ்வாரே இவரது கோயிற் றிருப்பணியைக் குறித்து இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கெழின்மாடம் எழுபது செய் துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன் " என்று கூறியிருக் கின்றார். இதனால் எழுபது மாடக்கோயில் எடுத்தனரென அறியலாகும். மாடக்கோயில் என்பது பெருங்கோயில் என் றும் வழங்கப்பெறும். பெருங்கோயில் எல்லாம் கோச்செங் கண்ணர் கட்டியவே எனின், ' பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெபதினோ டெட்டும்' என்று திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகத்திற் கூறி யிருத்தலின், எழுபத்தெட்டுப் பெருங்கோயில் செங்கட் சோழர் எடுத்தனசென்று கொள்ள வேண்டும். இவர் சிலந்தி