பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

சோழர் சரித்திரம்

________________

94 சோழர் சரித்திரம் புறநானூற்றிலுள்ள ' குழவியிறப்பினும்' என்னும் பாட்டின் கீழ்க்குறிப்பு " சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற்கிடந்து தண் ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண் டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு என்றுளது. தமிழ் நாவலர் சரிதையில் இப்பாட்டின் கீழ்க்குறிப்பு "சோன் கணைக்கா லிரும்பொறை செங்கணானாற் குணவாயிற் கோட் டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு என்றிருக்கிறது. இவை ஒன்றினொன்று சிறிது முரண்படினும், சேரமான் கணைக்காலிரும்பொறை கோச் செங்கண்ணாற் சிறைப்பட்ட செய்தி எல்லாவற்றினும் கூறப்பெற்துளது. இனி, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திரு நறையூர்ப் பதிகத்தில் கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்ற கழன் மன்னர் மணிமுடிமேற் காக மேறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே 33 என்றும், பாராள வரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல் துணியப் பரிமா வய்த்த தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே 11 என்றும் இவ்வரசரைக் குறிப்பிட்டிருக்தலால், சோழநாட்டி லுள்ள வெண்ணி, அழுந்தூர் என்னும் ஊர்களில் நிகழ்ந்த