பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

சோழர் சரித்திரம்

________________

கோச்செங்கட் சோழர் 93 உறையும் நாளில் வாய்மை குன்றுத தில்லைவாழ் மறையவர்க் குத் திருமாளிகை பல சமைத்தனர். இவ்வாறாக, பூவுலகைப் பொதுவறப் புறந்தருளிய கோச்செங்கட் சோழர் சிவபெரு மானுக்குரிய திருத்தொண்டுகள் பல யூரிந்து, தேவர்போற்றத் தில்லையம்பலவாணரின் திருவடி நீழலை யெய்தினர். இனி, இவ்வேந்தர் பெருமானைப்பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இங்கே எழுதுதற்குரியன இவர், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேரமன்ன னுடன் போர்புரிந்து வாகைசூடி, அவனது கழு மலம் என்னும் ஊரைக் கைப்பற்றியதுடன், சேரமானையும் பிடித்துச் சிறைப்படுத்தினர். அப்பொழுது கணைக்காலிரும் பொறைக்கு உயிர்த்தோழராயிருந்த பொய்கையார் என்னும் புலவர் செங்கட் சோழாது வெற்றித்திறத்தைச் சிறப்பித்துப் பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாகிய களவழி நாற்பது என் னும் நூலினை இயற்றிச் சோமானைச் சிறை மீட்டனர். சில பிரபந்தங்களிலே இவ்வரலாறு கொண்டு கோச்செங்கட் சோழர் சுட்டப்படுகின்றார். களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய வு தியன் கால்வழித் தளையை வெட்டியா சிட்ட வவனும் " என்று கலிங்கத்துப் பரணியும், மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும் " என்று விக்கிரம சோழனுலாவும், " அணங்கு, படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப்பண்டு கொடுத்துக் கள வழிப்பாக் கொண்டோன் என்று குலோத்துங்க சோழனுலாவும், இங்கனமே இராசராச சோழனுலா முதலியனவும் கூறுகின்றன.