பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

சோழர் சரித்திரம்

________________

92 சோழர் சரித்திரம் வந்தெய்தியது. கமலவதி கருவுற்றுப் பத்துத் திங்களும் நிரம்பி மகப் பெறும் பொழுது அடுத்த காலையில் காலத்தின் இயல்பை அறியும் முதியா ரொருவர் இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேல் இக்குழந்தை மூன்றுலகமும் புரக்க வல்லதாகும்' என இயம்பினர். அதனைக் கேட்ட வளவில் அன்னை கமலவதியும் 'ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும்படியாக என் கால்களை மேலே தூக்கிக் கட்டுங்கள் ' என்று சொல்லி, அங்கனமே அறிஞருரைத்த நற்பொழுது வந்துற்ற வளவில் காற் பிணிப்பு விடப்பெற்று, அருமணி போலும் புதல்வனைப்பெற்றெடுத்து ' என் கோச்செங்கண் ணனோ என்றாள்.' தேவி புதல்வனைப் பெற்று உயிர் துறக் கவே, செங்கோல் மன்னனாகிய சுபதேவன் ஆவியனைய அரும் புதல்வனை வளர்த்து முடிசூட்டுவித்துத் தானும் தவ நெறி சார்ந்து சிவலோக மெய்தினன். - கோச்செங்கட் சோழரும் சிவபெருமானது திருவரு ளால் பழம் பிறப்பினை யுணர்ந்து அரசாண்டு வருகின்றார் ஆகலின் சிவனார் மகிழ்ந்துறையும் திருக்கோயில் பல சமைத்த லாகிய திருத்தொண்டினைக் கடன்மையாக மேற்கொண்டனர். ஆனைக்காவிலே தாம் முன்பு அருள்பெற்றதனை அறிந்து ஞானச்சார்வாகும் வெண்ணாவல் மரத்தினுடன் கூட நலஞ் சிறந்து விளங்கும்படி பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சமைத்தனர். மற்றும், அமைச்சர்களை யேவிச் சோணாட்டின் பற்பல பகுதிகளிலும் அம்மையப்பர் எழும் தருளும் செம்மையாய திருக்கோயில்கள் பல சமைத்து அக் கோயில்தோறும் அமுதுபடி முதலானவற்றுக்கு அளவில்லாத செல்வங்களை ஏற்படுத்தினர்; தில்லைக் திருப்பதியை அடைந்து பொன்னம்பலத்தே திருதிருத்தம் புரியும் பெரு மானைப் போன்புடன் அடிவணங்கி உருகி உளங்களித்து