பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

சோழர் சரித்திரம்

________________

17. அரசியல் பொது - சோழநாட்டின் எல்லையும் அளவும் இவை யென்பதனை, "கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு. குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் எணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல் " என்னும் தனிப்பாடல் உணர்த்தா நிற்கும். சோணாடே யன்றித் தொண்டை நாடு முதலியனவும் பழைய சோழமன் னர்களின் ஆட்சியில் அடங்கியிருந்தன என்றாவது, அவர்கள் ஆணைக்குக் கீழ்ப்பட்டிருந்தன என்றாவது கூறுதல் பொருந்தும். அந்நாளில், நாட்டின் (மண்டலத்தின்) பிரிவுகட்குக் கூற்றம், கோட்டம், நாடு என்னும் பெயர்கள் வழங்கின. குறிச்சி, பாடி, ஊர், குடி, பதி, பாக்கம், பட்டினம், நகர் முதலியன ஊர்கட்கு வழங்கிய பெயர்களா கும். இவற்றுள் பட்டினம், நகர் என்பன பேரூர் அல்லது அரசன் உறையும் ஊரைக்குறிக்கும். இவ்விரண்டினுள் பட்டினம் என்பது கடற்கரையிலுள்ள நகராகும். நாடு என்பது தேம் என்னும் பெயரானும் வழங்கிற்று. சங்கச் செய்யுட்களினால் அறியலாகின்ற சோழர் தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்னும் இரண்டுமாம். சிலப் பதிகார வேனிற் காதையில், ( மாட மதுரையும் பீடார் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலி புனற் புகாரும் * தமிழகத்திலுள்ள நாடுகளின் பிரிவுவகைகள் யானெழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்து காட்டப் பெற்றுள்ளன. சோ . 7 |