பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

சோழர் சரித்திரம்

________________

98 சோழர் சரித்திரம் எனச் சோணாட்டிற்கு இவ்விரண்டு தலைநகர் இளங்கோ வடிகளால் ஒருங்கு குறிப்பிடப்படுதல் காண்க. இவற்றுள் உறையூர் உறந்தை எனவும் கோழி எனவும் வழங்கப்படும். ஓர் கோழியானது யானை யொன்றைப் போரிலே தொலைத்த இடத்தில் அமைக்கப்பெற்றதாகலின் இந்நகர்க்குக் கோழி யெனப் பெயருண்டாயது என்பர்; " முறஞ்செவி வாரணம் முன் சம முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர் என இளங்கோவடிகள் கூறுதலுங் காண்க. மற்றொரு தலைநகர்க்குச் சம்பாபதி, காவிரிப்பூம் பட்டி னம் என்னும் பெயர்கள் உண்டாய வரலாறு மணிமேகலையிற் கூறப்பட்டிருத்தல் முன் சோணாட்டின் பழமை கூறிய விடத் தும், அதற்குக் காகந்தி என்னும் பெயருண்டாயது காந்தன் வரலாறுரைத்த விடத்தும் போந்தமை காண்க. புகார் என்னும் பெயர் அதற்குண்டாயது மரக்கலங்கள் புகும் துறை முகமுடைமையாலாம். பெரிப்ளஸ் கமாரம்' என்றும், டாலமி 'கபேரிஸ்' என்றும் கூறியது இந்நகரையே என்பர். இத்தலைநகரின் அமைப்பும், சிறப்பும் கரிகாலன் வரலாறுரைத்த விடத்துக் காட்டப்பெற்றன. சோழர் தமிழகத்து முடிகெழுவேந்தர் மூவருள் ஒரு வராகலின், இவர், "படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய '" என்று தொல்காப்பியம் கூறுமாறு படை முதலிய அனைத்தும் உடையராவர். இவற்றுள் முரசானது வீரமுரசு, நீதி முரசு, ஈகைமுரசு என மூவகைப்படும். வீரமுரசினை இவர்