99
சோழர் சரித்திரம்
________________
அரசியல் 99 கள் மிக மதித்து போட்டி மாலை கட்டிப் பூசிக்கும் வழக்க முடையர். சோழர் குலத்தார்க்குப் பொதுவாக வழங்கும் பெயர்கள் இவை யென்பதனை, சென்னி வளவன் கிள்ளி செம்பியன் பொன்னித் துறைவன் புலிக்கொடிப் புரவலன் நேரியன் ஆர்க்கோன் நேரிழை அபயன் சூரியன் புனனாடன் சோழன் பெயரே என்னும் திவாகரத்தால் அறிக. இவற்றுள் சென்னி, வள வன், கிள்ளி, செம்பியன், சோழன் என்பன குடிபற்றிய சிறப்புப் பெயராகவும், அடையடுத்து இயற்பெயராகவும் சங்கச் செய்யுட்களிற் பயின்றுள்ளன. இப்பெயர்களும், அபயன் என்பதும் ஒழிந்த ஏனைய பெயர்கள் சோழருடைய நாடு, நகர், மலை, யாறு, கொடி, மாலை, குல முதல்வன் என்பவை பற்றியன. புலி இவர்கட்குக் கொடியாதலோடு இலச்சினையும் ஆம். ஆர் (ஆத்தி) கண்ணியும் தாரும் ஆகும். நேரிமலை சேரர்க்குரியதாகப் பதிற்றுப்பத்தில் கூறப்பட்டிருப்பது சிந்திக் கற்பாலது. சோழ மன்னர்கள் அரசியல் நடாத்துதற்கு அமைச்சர் குழு, புரோகிதர் குழு, தானைத் தலைவர் குழு , தூதுவர் குழு, ஒற்றர் குழு என்னும் ஐந்து பெரிய கூட்டங்களைத் துணையாக வைத்துக்கொண்டிருந்தனர் ; இவர்களன்றி காணத்தியலவர், அரசனது ஆணையை நிறைவேற்றும் கரும விதிகள், பண் டாரம் வகிப்போராகிய கனகச் சுற்றம், வாயில் காவலர், நகர மாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர் என் போரும் அவர்கட்கிருந்தனர். நட்பாளர், அறிவர், மடைத் தொழிலாளர், மருத்துவக்கலைஞர், நிமித்திகப் புலவர் என்பார் உறுதிச் சுற்றமாக விளங்கினர். இவை,