பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சோழர் சரித்திரம்

________________

100 சோழர் சரித்திரம் ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் 1 எனச் சிலப்பதிகாரத்தும், மணிமேகலையிலும் வருதலானும், ( அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தவாத்தொழிற் றூதுவர் சாரணர் என்றிவர் பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே காணத் தியலவர் கரும விதிகள் கனகச் சுற்றம் கடைகாப் பாளர் நகர மாந்தர் நளிப்படைத் தலைவர் யானை வீரர் இவுளி மறவர் இனையர் எண்பே ராயம் என்ப எனத் திவாகரம் முதலிய நிகண்டுகள் அவற்றை விரித்துரைத் தலானும், பிறவாற்றானும் பெறப்படும். உறையூரிலும், காவிரிப்பூம்பட்டினத்திலும் குடிகளின் வழக்குகளைக் கேட்டு நூனெறி பிழையாது தீர்ப்பளிக்கும் உயர் நீதிமன்றங்கள் (அறங்கூறவையம்) இருந்தன. இவற்றிலிருக்கும் நீதிபதிகள் தருமாசனத்தார் எனப்படுவர். " அறங்கெழு நல்லவை உறந்தை யன்ன " என அகத்திலும், உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்று " எனப் புறத்திலும், அரசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து உரை நூல் கோடி ஒருதிறம் பற்றினும் எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. மற்றும் அரசியல் நடாத்து தற்கு இன்றியமையாத பலதிறப்பட்ட வினைஞர்களும் இருந்தனராவர் எனக் கொள்ளுதல் வேண்டும். இவர்கள் யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால் வகைப்படையும் உடையராயிருந்தனர். இவற்றை நடாத்