பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

சோழர் சரித்திரம்

________________

கல்வி 103 வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி எனப்பட்ட துகிலின் தொகுதியும் மலையாரம், தீமுரண் பச்சை, கிழான் பச்சை, பச்சைவெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி எனப்பட்ட ஆரத்தொகுதியும், அம்பரேச்சம், கத்தூரி, சவாது, சாந்து, குங்குமம், பனிநீர், புமுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நிரியாசம், தைலம் எனப் பட்ட வாசத்தொகுதியும், மலைச்சரக்கு, கலை, அடைவுசரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப் பற்று, வாசாசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாறோசு, சூடன், சீனச்சூடன் எனப்பட்ட கருப்பூரத்தொகுதியும், புகார் முதலிய நகரங்களில் வாணிகம் செய்யப்பட்டவாதல் ஒருதலை. 19. கல்வி இம்மன்னர்கள் காலத்தில் அரசியல் முதலிய யாவும் தமிழ்மொழி வாயிலாக நடைபெற்று வந்தமையாலும், பாண்டி நாட்டிலும் சோணாட்டிலும் சங்கங்கள் நிறுவித் தமிழ் ஆராயப்பெற்றமையாலும், மூவேந்தர்களும் வள்ளல்களும் வரையாத வண்மையுடன் புலவர்களை மிக மதித்துப் போற்றி வந்தமையாலும் தமிழ்க் கல்வியானது மிக உயரியநிலையில் இருந்தது ; புலவர் பல்லாயிரவர் திகழ்ந்தனர் ; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணமாகிய அகத்திய மும், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், பனம்பாரம், பன்னிருபடலம், அவினயம், காக்கைபாடினியம், சிறுகாக்கை பாடினியம், சங்கயாப்பு, நற்றத்தம், பல்காயம், மயேச்சுரம், வாய்ப்பியம், இறையனார் களவியல் முதலிய இயற்றமிழ் நூல்