பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

சோழர் சரித்திரம்

________________

104 சோழர் சரித்திரம் களும், பெருநாரை, பெருங்குருகு, இசை நுணுக்கம், பெருங் கலம், இந்திரகாளியம், பஞ்சபாரதீயம், பஞ்சமாபு முதலிய இசைத்தமிழ் நூல்களும், பரதம், குண நூல், கூத்த நூல், முறுவல், சயந்தம், செயிற்றியம், பாதசேனாபதீயம், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல் முதலிய நாடகத்தமிழ் நூல் களும் தழைத்து விளங்கின ; எண்ணிறந்த பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை உள்ளிட்டன தலைச் சங்கத்தாராலும், கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலையகவல் என இத்தொடக்கத்தன இடைச்சங்கத்தாராலும், நெடுந்தொகைநானூறு, குறுந்தொகைநானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பதுகலி, எழுபது பரிபாடல், பத்துப்பாட்டு, முத்தொள்ளாயிரம், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்று இத்தொடக்கத்தன கடைச்சங்கத்தாராலும் பாடப்பெற்று நிலவின ; தெய்வப்புலமைத் திருவள்ளுவ தேவரால் திருக் குறள் என்னும் செந்தமிழ்த் திருமறையும், சோமுனியாகிய இளங்கோவடிகளால் சிலப்பதிகாரமும், கூலவாணிகன் சாத்தனாரால் மணிமேகலையும், கபிலர் முதலிய நல்லிசைப் புலவர்களால் இன்னா நாற்பது முதலிய ஏனைய கீழ்க்கணக்கு நூல்களும் இயற்றப்பெற்று ஒளிர்ந்தன ; வானநூல், எண்ணூல், மருத்துநூல் முதலிய கலைகளும் வழக்கில் இருந்தன. மற்றும், அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு என ஏழுவகையாற் பகுக்கப்படும் பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை,