பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

சோழர் சரித்திரம்

________________

கல்வி 105 துடி, பெரும்பறை முதலிய தோல் கருவிகளும், வங்கியம் என்னும் தளைக்கருவியும், பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரம்புக்கருவிகளும், கஞ்சக் கருவிகளும், பயிலப்பெற்று வந்தன. ஆயிரம் நாம்புடைய ஆதியாழ் என்பதும் இருந்தது ; குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையானும் பிறக்கும் பண் விகற்பங்களும், பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய (11,991) ஆதியிசைகளும் தமிழ்ப் பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன; வேத்தியல், பொதுவியல் என்னும் இருதிறமுடைய அகக்கூத்து, புறக் கூத்துகளும், குரவை, கலிநடம், குடக்கூத்து, காணம், நோக்கு, தோற்பாவை என்னும் விநோதக் கூத்துகளும், அம் மனை, பந்து, கழங்காடல், உந்தி, சாழல், பல்லாங்குழி, அவலிடி, கொற்றி, பிச்சி, வாரிச்சி, சிந்துப்பிழுக்கை, குடப்பிழுக்கை, பாண்டிப்பிழுக்கை, பாம்பாட்டி, ஆலங்காட்டாண்டி முதலிய பல்வரிக் கூத்துகளும் பிறவும் நடிக்கப்பெற்று வந்தன. இப்பொழுது வெளிவந்துள்ள எட்டுத்தொகை, பத்துப் பாட்டு முதலிய கடைச்சங்க இலக்கியங்களிலிருந்து அறி யப்படும் புலவர் ஏறக்குறைய எழுநூற்றுவர் ஆவர். இவர் களில் ஒளவையார், ஆதிமந்தியார், காக்கைபாடினியார் நச் செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளிவீதியார், வெண் ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி, குறமகள் குறி யெயினி, காவற்பெண்டு, குன்றியாள், கழார்க்கீரன் எயிற்றியார், காமக்கணிப்பசலையார், நக்கண்ணையார், நன்னாகையார், பூங் கண்ணுத்திரையார், பொன்மணியார், மாறோகத்து நப்பசலை யார், போந்தைப் பசலையார், அள்ளூர் நன்முல்லையார், பாரி மகளிர் முதலாயினார் நல்லிசைப்புலமை வாய்ந்த மெல்லியலார் ஆவர். இவற்றிலிருந்து அக்காலத்தே கல்வியில் இருபாலாரும் எங்கனம் சிறப்டைந்திருந்தன ரென்பது புலப்படும்.