பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

சோழர் சரித்திரம்

________________

20. சமயம் தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பே உயிர் உடல்களை வெவ்வேறாக உணர்ந்திருந்தனர் என்பது தமிழ் எழுத்துக்களுக்கு உயிர் என்றும் மெய் என்றும் பெயரிட் டிருத்தலானே பெறப்படும். எவ்வளவு பழங்காலத்திற் சென்று நோக்கினும் தமிழர்கள் உலகம், உயிர், கடவுள் என்னும் மூன்று பொருளையும் உணர்ந்திருந்தமையோடு, உலகம் ஐம்பூதங்களால் ஆயதென்றும், உயிர்கள் வினைக்கட் டுடையன என்றும், கடவுள் வினைக்கட்டில்லாதவர் என்றும் அறிந்திருந்தனர் என்பது புலனாகின்றது. மிக்க பழமை வாய்ந்ததாகிய தொல்காப்பியத்தில், "காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் 12 எனவும், "நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் 3 எனவும், “ வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் எனவும் கூறப்பட்டிருத்தல் காண்க. மற்றும் அதிலே கடவுள் என்னும் பெயரும், கடவுளை வாழ்த்துதலும் கூறியிருப்பதி னின்று பரம்பொருளானது எல்லாவற்றையும் கடந்து நிற்கும் இயல்பினதென்பதும், அதனை நினைந்து வாழ்த்தி வழிபடுதலே உயிர்கள் கட்டினின்றும் நீங்கி இன்புறுதற்குரிய நெறி என்பதும் அவர்கள் அறிந்திருந்தமை போதரும். இயல்பாகவே கட்டின்மையும், முற்றுணர்வும், வரம்பிலின்ப மும் உடைய அம் மெய்ப்பொருளையே பல்வேறு காலங்