பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

சோழர் சரித்திரம்

________________

சமயம் 107 களில் பற்பல தேயத்தினுமுள்ள மாந்தர்கள் தாம் தாம் அறிந்தவாறு வெவ்வேறு பெயரானும், வெவ்வேறு நெறி யானும் வழிபட்டு வருகின்றனர். - தமிழ் நாட்டிலே குறிஞ்சி நில மக்கட்கு முருகக்கடவு ளும், முல்லைநில மக்கட்குத் திருமாலும், மருதநில மக்கட்கு இந்திரனும், நெய்தல் நில மக்கட்கு வருணனும் தெய்வங்கள் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. திணைப்பிரிவும், திணை மக்கட் பிரிவும் இயற்கையானவையே எனினும், திணைகட்குத் தெய்வ அடைவு ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன்பு ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. கண்ணபிரான் ஆயர்பாடியில் வளர்ந்து ஆயர்களுடன் சேர்ந்து ஆவினம் மேய்த்தல் முதலிய விளையாடல்களைச் செய்து போந்த பின்னரே முல்லை மக்களிடத்து மாயோன் வழிபாடு சிறந்து விளங்கிற்று என்னலாம். ஆரியவேதங்களில் மிகுத்து கூறப்படும் இந்திரன் வழிபாடும், வருணன் வழிபாடும் அக் காலத்திற்றான் தமிழர்களாலே கைக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். முருகன் வழிபாடு அங்ஙனம் இடையில் உண்டாய தென நினைக்கக் காரணமில்லை. இனி, பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கூறப்படும் கடவுளர் நால்வர். நக்கீரர் பாடிய 56-ம் புறப் பாட்டிலே இடபக்கொடியும் கனிச்சிப்படையும் மணிமிடறும் உடைய சிவபெருமானும், வால்வளைமேனியும் கலப்பைப் படையும் பனைக்கொடியும் உடைய பலராமனும், நீலமணி யொக்கும் மேனியும் கலுழக்கொடியும் உடைய கண்ணனும், மயிலாகிய கொடியும் மயிலூர்த்தியும் உடைய முருகவேளும் முறையே கூறப்பெற்றுளர். அதில், ஞாலங் காக்கும் கால முன்பின் தோலா நல்லிசை நால்வர் 11