பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

சோழர் சரித்திரம்

________________

110 சோழர் சரித்திரம் வண்மையை விளக்கும்; முருகவேள் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பல சங்கச் செய்யுட்களிற் பயின்றிருத்தலும் அதற்குச் சான்றாகும். திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்; திருவாவினன்குடி, திருவோகம் முதலிய திருப்பதிகளைத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. பரிபாடலும், பிற தொகை களும் அவற்றைப் புகழ்ந்துரைக்கின்றன ; சிலப்பதிகாரமும், "சீர்கெழு செந்திலும் *செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் " என்றேத்துகின்றது. இனி, பழைய தமிழ் மக்களின் சமயக்கோட்பாடு இது வெனக் கூறவே சோழர்களின் சமயமும் இத்தன்மைத் தென்பது கூறாமலே விளங்கும். சோழமன்னர்கள் சிவ பெருமானையே முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுவோர் என்பதும், திருமாலிடத்தும் செவ்வேளிடத்தும் போன் புடையார் என்பதும் கடைப்பிடிக்க. கரிகால்வளவன், கோச்செங்கண்ணர் என்னும் சோழ வேந்தர்கள் பற்பல சிவாலயத் திருப்பணிகள் செய்து போந்தமையும் அவர்கள் சமயம் சைவம் என்பதனை நிலைநிறுத்தும். சோழர்கள் இந் திரனுக்குப் பெரியதோர் திருவிழாச்செய்து போந்ததிலிருந்து அவர்கள் நாட்டின் நலங்கருதி இந்திரனையும் அன்புடன் பூசித்து வந்தனரென்பது பெறப்படும். அவர்கள் இந்திரனைப் பெருஞ் சிறப்புடன் கொண்டாடி வந்த காரணத்தால் அவனுடைய கற்பகத்தரு, வெள்ளையானை, வச்சிரப்படை என்பவற்றிற்கும் புகார் நகரிலே தனித்தனியாகக் கோயில் கள் ஏற்படுவனவாயின.

  • செங்கோடு என்பது திருச்செங்கோடு என்றும், வெண்குன்றம் என்பது சுவாமிமலை என்றும் கூறுவர் சிலப்பதிகார அரும்பத உரையா சிரியர் .ஏாகம் மலைநாட்டகத்தொரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர்.