பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

சோழர் சரித்திரம்

________________

சமயம் 111 இனி, வட நாட்டிற் செங்கோலோச்சிய பெருவேந்த னாகிய அசோகன் தன் மக்களாகிய சங்கமித்திரை, மகேந்து என்பவர்களுடன் புத்தமத போதகர் பலரைத் தேயந் தோறும் விடுத்து அம் மதத்தைப் பரவச் செய்தமையால், கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ் நாட்டிலும் இடம் பெற்று வளரத்தொடங்கிற்று. சமண மதமும் அக்காலந்தொடங்கியே பாவலுற்றது என்னலாம். சிலப்பதிகாரம் முதலியன கொண்டு நோக்கு மிடத்து, கி. பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளிலே, தமிழ் நாட்டின் தலை நகரங்களாகிய புகார், உறந்தை, மதுரை, வஞ்சி, காஞ்சி என்னும் இடங்களில் சமண பௌத்த மதங்கள் மிக்க வலிமையுற்றிருந்தமை புலனாகின்றது. அருகன் கோட்டமும், புத்த சைத்தியமும் நகர்ப்புறங்களில் கட்டப்பட்டிருந்தன ; சமண முனிவர்களும், பௌத்தமுனிவர்களும் உறையும் பள்ளிகள் ஆங்காங்கிருந்தன ; சாரணர்கள் இடையறாது மதபோதனை புரிந்து வந்தார்கள் ; ஆடவர்களும் பெண்டிர் களும் மிகுதியாக அம்மதங்களிற் புகுவாராயினர். அக் காலத்துத் தமிழ் வேந்தர்கள் நடுவுநிலையுடன் இத்தனைக் கும் இடந்தந்து அவர்களையும் புரந்து வந்தமை பெரிதும் பாராட்டற்குரியது. சிவன், திருமால் முதலிய தெய்வங்களை எள்ளுதலின்றியே அவர்கள் தம் மதங்களைப் போதித்து வந்தமையாற்றான் அவை விரைந்து பாவலுற்றன எனக் கருதல் பொருந்தும். இனி, அக்காலத்திலுள்ள புலவர்களாயினும் பிறராயி னும் அவர்கள் தம்மின் வேறுபட்ட சமயத்தார்களின் உணர்ச்சியை மதித்து அவற்றைச் சிறிதும் இகழாது பாராட்டி வந்தனர் என்பதும், ஓர் குடும்பத்திலுள்ள பலர் தத்தம் விருப்பத்திற் கியைந்தவாறு வெவ்வேறு மதங்களைக் கைக்