பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

சோழர் சரித்திரம்

________________

114 சோழர் சரித்திரம் "பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிக மல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே என்று இத்தன்மையாகவும் ; குன்றக்குரவையில் குறவர்கள் முருகவேளைப் பாடு மிடத்து, சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பௌவத்தி னுள் புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே " அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்தியவே லன்றே பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே என்று இன்னணமும் ; அவரவர் உணர்ச்சியுடன் கலந்து எல்லாத் தெய்வங்கனையும் வாயார மனமார வழுத்துவா ராயினர். இனி, சிவபிரான் திருக்கோயில் முதலாக முன் கூறிப் போந்த கோயில்களன்றி, மாசாத்தன், ஞாயிறு, திங்கள் என்னும் தெய்வங்கட்கும், திருக்கைலை, செவ்வேளின் கைவேல் என்பவற்றுக்கும் தனித்தனியாக இயற்றப்பெற்ற கோயில்கள் அந்நாளிலே நிலவின வென்க.