பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

சோழர் சரித்திரம்

________________

குறிப்புரை 117 மறு - குற்றம், களங்கம் 17 முசுக்கலை - ஆண்குரங்கு சீற்றம் - கோபம் அளி - அருள், கருணை சங்கரித்து - அழித்து 18 பேறு - பெறத்தகுந்த நன் மைகள் | விசிட்டம் - மேன்மை வாகை - வெற்றி மாலை மிலைந்தனன் - சூடினன் 19 ஒரோவொன்றாக - ஒவ் வொன்றாக விண்டு - மலை கா - சோலை சிக்குவேள் - கரும்பை வில் லாகவுடைய மன்மதன் ஆரியை - அம்மை, உமா தேவியார் | தையல் - அம்மை சுலாவும் - சூழ்ந்துள்ள மாவளைக்கையிடத்தன் - சிவ பெருமான் காமர்சேர் - அழகு பொருந் மாகநேர் - ஆகாயம் போன்ற ஆறுமுடித்த அருட்கடல் - கங்கையைச் சடையில் அணிந்த சிவபெருமான் ஆரல் - கார்த்திகை நட்சத் திரம் | துலையாம் ஒள்ளிய திங்கள் - ஐப்பசி மாதம் எள்ளரிதாம் இகழமுடியாத பரசேந்திய வேந்தல்- மழுப் படையை ஏந்திய தலைவ னான சிவபெருமான் 21 முழைஞ்சு - குகை அருத்தி - விருப்பம் உன்னருமேன்மை-நினைக்க முடியாத பெருமை ஒன்னலர் - பகைவர் திருக்கு - குற்றம் ஓவில் - நீங்குதல் இல்லாத, அளவற்ற . 22 திப்பிய - தெய்வத் தன்மை வாய்ந்த | போகம் - இன்பம் 23 கலுழன் - கருடன் சேமம் - காவல் 24 கடுவிசை - மிகுந்த வேகம் ஈண்டி - திரண்டு | கொடுவரி - புலி ; வளைந்த கோடுகளையுடையது 25 விழாக்கோள் - திருவிழாக் கொண்டாடுதல் வல்லெயிறு - கொடிய பற்கள் இடும்பை - துன்பம் பொருதுறைத்தலை-போர்க் களத்தின் இடத்தில் வசம் செய்தல் - ஆளுதல் ; 20 விண்டு புராணம் - விஷ்ணு புராணம் மேகவாகனன் - தேவேந் திரன் மன்றல் - திருமணச்செய்தி ஒகை - உவகை, மகிழ்ச்சி அனிகம் - சேனை, படை உம்பர்நாதன் - தேவர்களுக் குத் தலைவனாகிய சிவபெரு மான் | சீகரம் - அலைகள் சாகரம் - கடல்