பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

சோழர் சரித்திரம்

________________

சோழர் குடி ஒரு தெய்வத்தினிடமிருந்தோ தமது ப்பு தோன்றியதாகக் கற்பித்துக்கொள்வது வழக்கமாக உள்ளது. இத்தகைய எண்ணம் தமிழ்நாட்டாரையும் பற்கும்க விடவில்லை. சூரிய சந்திர குலக் கற்பனை வடநாட்டாசியமும், தமிழ்நாட்டாச ரிடமும் ஒரு பெற்றியே காணப்பங்காது. இது முதலில் எங்கே தோன்றியதென்பது ஐயப்பாபேடி வடமொழிப் புராண இதிகாசங்களிற் சில, வடவர்களையும், தமிழ் மன்னரையும் சேர்த்துப் பிணைப்பனவாக வுள்ளன. - பாரத அரி வமிசம் கூறுவது பின் வருமாறு காண்க: "திருமால் உந்தியில் பிரமன் தோன்றினன் ; பிரமன் மகன் அத்திரி ; அவன் புதல்வன் சந்திரன் ; (சந்திரன் வழியில் 16 சந்ததிகளுக்குப் பின் ஆக்கிரீடன் என்பவன் தோன்றி னான்.) ஆக்கிரீடன் மக்கள் பாண்டியன், கேரளன், சேரன் சோழன் என்போர். அரிவமிசத்தில் கோளன் வேறு, சேரன் வேறு கூறப் படுவ தென்னையோ தெரியவில்லை. இந்நூல் கூறுகின்றபடி தமிழரசர் யாவரும் சந்திர குலத்தவராதல் வேண்டும். தமிழ் நூல் ஒன்றிலாவது சோழர் சந்திர குலத்தவ சாகக் கூறப்படவில்லை. கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழனுலா முதலியவற்றினெல்லாம் சோழர் சூரிய குலத்தவ சாகக் கூறப்படுகின்றனர். " செங்கதிர்ச் செல்வன் றிருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட" என்று மணிமேகலையும் சோழரைச் சூரிய குலத்தவராகவே கூறுகின்றது. இங்கனமே பாண்டியர் சந்திர குலத்தவராகக் கூறப்படுகின்றனர்.