பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சோழர் சரித்திரம்

என்று புகார் நகரைப் பொதியிலோடும், இமயத்தோடும் ஒப்புமைப்படுத்து, அதனைப் பொதுவறு சிறப்புடையது. என்றும் கூறிவைத்தார். சோழநாட்டின் கண்ணதாகிய திருவாரூர்த் திருப்பதியின் பழமையை, திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகத்து ஓர் பதிகம் முழுவதிலும் வைத்துப் பாராட்டியிருப்பது சிந்திக்கற்பாலது.

“ஒருவனா யுலகேத்த நின்ற நாளோ
வோருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான் மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே”

என்பது காண்க. இங்கனமே இந்நாட்டின் பழமையைக் குறிப்பன மற்றும் பல வுள்ளன. இனி, சோழாது மாபு வரலாறு ஆராய்தற்பாலது.


3. சோழர் குடி

மிழ்நாட்டின் பழங்குடிகளிலிருந்து தோன்றி அரசு நிலையிட்டுத் தலைவரானவர்களே மூவேந்தரும் எனல் வேண்டும். உலகிலே எவ்வகுப்பினரும் சிறிது நாகரிகமுற்ற காலையில், தம்மை ஏனையவரினும் மேம்பட்டவர் என்று காட்டிக்கொள்வதற்காக, சூரியன், சந்திரன், அக்கினி என்பவரில் ஒருவரிடத்திலிருந்தோ அல்லது வேறு யாதாவது